Tamil Healthy Food : கோதுமை மாவு நமக்கு பல வகைகளில் நன்மை கொடுக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கோதுமை சப்பாத்தி பயன்படுகிறது. இந்த கோதுமை வைத்து பூரி உட்பட பல உணவுகள் செய்யலாம். இந்த வகையில் கோதுமை மற்றும் ரவை பயனபடுத்த அடை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்
தேவையான பொருட்கள் :
ரவை – ஒரு கப்
கோதுமை மாவு – ஒரு கப்
வெங்காயம் – 2
இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – கால் ஸ்டீஸ்பூன்
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
தயிர் – 200 எம்எல்
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் மற்றும் நெய்
செய்முறை :
மேலே கொடுக்கப்பட்டுள்ள ரவை, கோதுமை மாவு உட்பட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும். இதில் வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கியும், இஞ்சியை நசுக்கியும் சேர்த்துக்கொள்ளவும். இந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
அதன்பிறகு ஒரு வாழை இலை எடுத்து லேசாக எண்ணெய் விட்டு பிசைத்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வாழை இல்லையில் வைத்து தட்டவும். அதன்பிறகு தேசை கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு தட்டி வைத்துள்ள மாவை அதில் போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் அதை திருப்பி போட்டு மேலும் எண்ணெய் விடவும். இருபுறமும் நன்றாக வெந்து எடுத்தால் சுவையாக ரவை அடை தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil