Tamil Lifestyle Update Rice Making Easy Way : இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மக்களால் அதிகம் உண்ணப்படும் முக்கிய உணவு சாதம். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையில் ஒன்றான சாதம் தமிழகத்தில் பல வீடுகளில் ஒரு நாள் 3 வேளையும் உணவாக அரிசி சாதமை் சாப்பிட்டு வருகினறனர். சாதம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
ஆனால் சாதம் செய்யும்போது அதனை சரியான பதத்தில் வடிப்பது மிகவும் அவசியம். பதத்தை தவறவிட்டால் சாதம் குழைந்துவிடும். அதன்பிறகு சாதத்தின் மீதான ஆர்வமே குறைந்துவிடும். இதற்கான பலரும் சாதம் செய்ய குக்கரை பயன்படுத்தி வருகின்றனர். சாதத்தை வடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் ஆனால்குக்கரில் வைக்கும் போது விசில் மீது கவனம் இருந்தால் போதுமானது.
அரிசிக்கு போதுமான தண்ணீரை கலந்து குக்கரை மூடி அடுப்பில் வைத்துவிட்டால் குறிப்பிட்ட விசில் வந்தவுன் குக்கரை இறக்கி வைத்துவிடலாம். இது ஒரு எளிமையான வழி என்பதால், இதனை பலரும் பயன்படுத்தி வருகினறனர் குறிப்பாக பேச்சிலர்கள் பலரும் சீக்கிரமாக வேலை முடிக்க குக்கரை சாதத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் குக்கர் இல்லாமலும் சாதத்தை உதிறியாக வடிக்கலாம். இந்த முறையில் தயாரித்து, எரிபொருளை சேமிக்கலாம். அலுவலகம் செல்கிறவர்களுக்கும் மிகவும் உபயோகமான செய்முறை இது. வடிக்காமல் எப்படி சூப்பரான சாதம் சமைப்பது? என இங்கு பார்க்கலாம்.
முதலில் அரிசியை 3 முறை நன்றாக கழுவவேண்டும். அதன்பிறகு மூடும் வசதி கொண்ட ஒரு பாத்திரத்தில் அரிசியை இடுங்கள். அந்த அரிசியை பாத்திரத்தில் சமமாக பரப்பிக் கொண்டு அதன்மீது தண்ணீர் ஊற்றுங்கள். இந்த சமையல் முறையில் தண்ணீர் அளவுதான் முக்கியம்.
பாத்திரத்தில் அரிசிக்கு மேல் நிற்கும் தண்ணீர் அளவை ஆள்காட்டி விரல் கொண்டு அளந்து பாருங்கள். ஆள்காட்டி விரலின் நுனியில் இருந்து 2-வது வரையைத் (குறுக்கு ரேகை) தொடுகிற வரை தண்ணீர் வைக்க வேண்டும். அரிசிக்கு மேல் நிற்கும் தண்ணீரைத்தான் அளக்கவேண்டுமே தவிர, பாத்திரத்தின் அடிப்பகுதியில் இருந்து அளந்துவிடக் கூடாது.
இதன்பிறகு அரிசி- தண்ணீர் கலவைக்குள் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெயும், தேவையான அளவு உப்பும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படியே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும், தீயைக் குறைக்க வேண்டும். பாத்திரத்தின் மூடியைத் திறந்து, பின்னர் பாதி திறந்த நிலையில் வைக்கலாம். தேவைப்பட்டால் வேறு மூடியை இதற்கு பயன்படுத்துங்கள். தீயை குறைத்து இப்படி 5 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் சாதத்தை லேசாக கிளறி விடுங்கள். அடுத்து தீயை மேலும் குறைத்து ‘சிம்’மில் வைத்து மூடிவிடவும். 2 நிமிடங்கள் இப்படி இருக்கட்டும். அதன்பிறகு திறந்து பார்த்தால் சாதம் லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். மீண்டும் லேசாகக் கிளறி விடவும். அடுப்பை அணைத்துவிட்டு, 2 நிமிடம் மூடி வைக்கவும்.
இப்போது திறந்து பார்த்தால் சூப்பரான உதிரியாக சாதம், நன்றாக வெந்திருக்கும். இந்த சாதத்தை சிறிது நேரம் ஃபேன் காற்றில் சூடு தணிய விடுங்கள். அப்போதுதான் சாதம் கட்டி ஆகாமல் உதிரியாக இருக்கும். ஒருமுறை இந்த செய்முறையை பயன்படுத்திப் பாருங்கள்… மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவீர்கள்! குறிப்பாக இந்த முறை அலுவலகம் செல்வோருக்கும், அவசரத்தில் சமைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “