scorecardresearch

மசாஜ், உணவுகள் மூலமாக மார்பக அளவை மாற்ற முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

மார்பகம் தளர்ந்த மாதிரி இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும் இருக்கமாக இருந்தால் இந்த பிரச்சனை என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மசாஜ், உணவுகள் மூலமாக மார்பக அளவை மாற்ற முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

உடல் அளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பெண்கள் நாள்தோறும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் அவர்களின் தோற்றம் மற்றும் உடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்று பல கட்டுக்கதைகள் அவ்வப்போது வெளியாகி பெண்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெண்களின் மார்பகங்கள் குறித்து பல கட்டுக்கதைகள் இருக்கிறன. உள்ளாடடை இறுக்கமாக அணி்தால் மார்பக புற்றுநோய் வரும் என்ற பல கட்டுக்கதைகளை சொல்லலாம். அதேபோல் மார்பகம் தளர்ந்த மாதிரி இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும் இருக்கமாக இருந்தால் இந்த பிரச்சனை என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனால் மார்பகங்களை சரி செய்ய பல மருந்துகள் கிரீம்கள் என இணையததில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றில் எதை பயன்படுத்தினாலும் மார்பகத்தில் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை என்பதை பயன்படுத்தியவர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள். அதே சமயம் மார்பகத்தின் அளவை பெரிதாக அல்லது சிறிதாக மாற்றவோ இயலாத ஒன்று.

சில குறிப்பிட்ட அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்ய சற்று வாய்ப்புள்ளது.

மார்பக அளவை குறைக்கும் அறுவை சிகிச்சை

ரிடக்ஷன் மாமாபிளாஸ்டி எனப்படும் இந்த சிகிசசை முறையில், மார்பகத்தின் எடையை அதிகரிக்க மற்றும் குறைக்க சருமத்தில் வெட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மார்பகத்தின் அழகை பராமரிக்க பெரும்பாலரும் இந்த முறையை பயன்படுத்துவார்கள். இந்த சிகிச்சை முறை மார்பகத்திற்கு நல்ல வடிவத்தை கொடுக்கும். தளர்ந்த மார்பகங்களை இறுக்கமாக்க செய்யும் இந்த முறையை பயன்படுத்தலாம்.

மார்பக வடிவ அளவை மேம்படுத்தும் அறுவை சிகிச்சை

அங்மென்மேஷன் மாம்பிளாஸ்டி என்று அழைக்கப்படும் இந்த வகை சிகிச்சை முறையில் மார்பகத்தில் வடிவத்தை மேம்படுத்தவதற்கோ அல்லது அதன் அளவை பெரிதாக்குவதற்கோ மேற்கொள்ளப்படுகிறது. மார்பகங்கள் சிறியதாக இருப்பவர்கள் வடிவம் சரியாக இல்லாதவர்கள் மார்பகத்தின் வடிவத்தினை மேம்படுத்த இதை தேர்வு செய்துகொள்ளலாம்.

சரியான மார்பக அளவு எது?

பெண்களின் உடலமைப்பை பொறுத்து மார்பத்தின் அளவு மாறுபடும் என்று சொல்வார்கள். அதேபோல் மார்பகம் இந்த அளவில் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. சிலருக்கு  மிகவும், சிறியதாகவும், சிலருக்கு சாதரணமாகவும் இருக்கும். அதேபோல் மார்பகங்கள் வாழ்நாள் முழுவதும் அளவில் மாறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஒரு குழந்தை கருவில் உருவாகும்போதே அதன் மார்பகங்கள் வளர தொடங்கும். ஆனால் பெண்களை பொறுத்தவரை அவர்களின் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் காரணமாக மார்பகங்கள் அளவு அதிகரிக்கிறது. வாழ்நாள் முழுவதும் வடிவத்திலும் அளவிலும் மாற்றத்தை கண்டு வரும் மார்பகங்கள் இந்த அளவில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட முடியாது. இதற்கு வடிவத்திற்கான வரையறையும் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil health women breast size myth diets and massage

Best of Express