Tamil Health Curry Leaves Kozhambu : உணவுப்பொருட்களில் முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று கருவேப்பிலை. வாசனை பொருளாக பயன்படும் கருவேப்பிலை பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. முக்கியமாக தலைமுடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்கும் கருவேப்பிலை இயற்கை மருத்தவத்தில் தனது முழுமையான பயனை கொடுக்கிறது. உடல் எடை குறைப்பு, நீரிழிவு நோய், மலச்சிக்கல், இரத்த சோகை வயிற்றுப்புண், உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வு தருகிறது. சிறுநீரகம் தொடர்பாக பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.
கருவேப்பிலை வைத்து கருவேப்பிலை சாதம், தொக்கு, என பலவகை உணவுகளை செய்யலாம். அந்த வகையில் தற்போது கருவேப்பிலை வைத்து குழம்பு செய்வது எப்படி என்பதை பார்போமா?
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மிளகு – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிய கட்டி
வரமிளகாய் – 6
கருவேப்பிலை – 2 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
புளி கரைசல் – ஒரு கப்
மஞ்சள்பொடி – அரை டீஸ்பூன்
செய்முறை :
முதலில் புளிளை எடுத்து நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும. அதன்பிறகு அடுப்பில் கடாய் வைத்து துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வெந்தயம் – அரை டீஸ்பூன் மிளகு – கால் டீஸ்பூன் பெருங்காயம் – சிறிய கட்டி வரமிளகாய் – 6 கருவேப்பிலை 2 கப் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும.
இந்த கலவை ஆறியபின்பு அதனை மிக்சியில் போட்டு நன்றாக விழுது போன்று அரைத்து எடுத்தக்கொள்ளவும். அதன்பிறகு அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு அதில் கடுகு சேர்த்து நன்றாக பொறிந்தவுடன் புளிக்கரைசலை அதனுடன் சேர்க்கவும்.
அதன்பிறகு அதில் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொத்திக்க வைக்கவும். புளிக்கரைசல் நன்றாக கொதித்தவுடன் மிக்சியில் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை விழுதை அதில் சேர்த்து நன்றாக கிண்டி கொதிக்கவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். 5 நிமிடங்கள் கொத்தித்தவுடன் எடுத்து பறிமாறலாம். சுவையான கருவேப்பிலை குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil