Tamil Recipe Update : இந்தியாவின் பரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானது சாம்பார். சாதம், இட்லி தோசை, சப்பாத்தி, பூரி என பலவகை உணவுகளுக்கும் பயன்படுத்தப்படும் இந்த சாம்பார் செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். இதனால் அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகள், பேச்சிலர்கள், விரைவாக செய்து முடிக்கும் வகையில் இருக்கும் உணவை செய்து சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.
Advertisment
அதிலும் சிலர் அவசர அவசரமாக சாம்பார் செய்து சாப்பிடுவார்கள். இதனால் சாம்பார் சுவை தெரியாமல் பசிக்கு சாப்பிடுவது போன்ற உணர்வை கொடுக்கும். அப்படி அவசரத்தில் இருப்பவர்கள் சுவையாக சாம்பார் செய்வதற்கு எளிய வழிமுறை உள்ளது. சாம்பார் என்ற பெயரை கேட்டாலே உடனடியாக நினைவுக்கு வருவது பருப்பு. ஆனால் பருப்பு இல்லாமலும் சாம்பார் வைக்கலாம் என்பதற்கான எளிய முறையை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு டீ ஸ்பூன்,
கடுகு – கால் டீ ஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன்,
கடலை பருப்பு – ஒரு டீ ஸ்பூன்,
வெந்தயம் – அரை டீ ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 5,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தக்காளி – 4, கொத்தமல்லி – சிறிதளவு,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவைகேற்ப,
தண்ணீர் – தேவையான அளவு,
கடலை மாவு – 2 டீ ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்தக்கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் . நன்கு கொதித்ததும் கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
அன்பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்தச் சாம்பார் மிக சூப்பராக இருக்கும். அவசரத்தில் செய்யும் இந்த சாம்பார் அதிகளவு சுவை நிறைந்த்தாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil