Tamil Health Update : பாதாம் பருப்புகளை தவறாமல் உட்கொள்வது இறப்பு அபாயம் மற்றும் வயதானவர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஹார்வர்ட் தலைமையிலான ஆய்வு கூறியுள்ளது.
நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியில், வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாதாம் பருப்புகள் எடுத்துக்கொள்ளும்போது இறப்பு அபாயத்தைக் குறைப்பதற்கும் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கும் மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று கண்டறிந்துள்ளது. குறிப்பாக உணவின் தரம் சிறப்பாக இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் பலருக்கு பாதாம் பருப்பு சிறந்த நன்மையை தருகிறது,
பாதாம் பருப்புகளை உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது. வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாதாம் பருப்புகளை எடுத்துக்கொள்ளும்போது எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயம் 14 சதவிகிதம், இருதய நோய்களால் (சிவிடி) இறக்கும் அபாயம் 25 சதவிகிதம் மற்றும் சுமார் 1.3 வருட ஆயுட்கால அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
வாரத்திற்கு இரண்டு முதல் நான்கு முறை பாதாம் பருப்புகளை உட்கொள்வது அதன் நன்மைகளைக் கொண்டிருக்கலாம், ஒரு துணை உணவை உட்கொள்ளும் மக்களிடையே கூட, வாதுமை பருப்பு எடுத்துக்கொள்வது ஒரு நாளைக்கு ஒரு பாதி அதிகரிப்பு நன்மைகளுடன் தொடர்புடையது, இதில் 12 சதவிகிதம் இறப்பு ஆபத்து மற்றும் 26 சதவிகிதம் குறைவான இருதய நோய்களால் இறக்கும் ஆபத்தை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக, கடந்த 1986-ம் ஆண்டு சுமார் 67,014 பேரிடம் செவிலியர்கள் நடத்திய சுகாதார ஆய்வின் சராசரி கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் படிப்பில் சேர்ந்தபோது ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாக இருந்தனர், தற்போது சுமார் 20 ஆண்டுகள் (1998-2018) இதே உணவுமுறை பின்பற்றி வருகின்றனர். இவர்களிடம் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் உணவு உட்கொள்ளல் மதிப்பீடு செய்யப்பட்டது,
இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் தங்கள் ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளல் குறித்து அறிக்கை வெளியிட்டனர். இதில் அவர்கள் பாதாம் பருப்புகள், மற்ற மரக் கொட்டைகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை உட்கொண்டதாக கூறியுள்ளனர். இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நிலைகளில் பாதாம் பருப்பு எடுத்துக்கொண்வர்கள் நீண்ட ஆயுள் தொடர்பான பல்வேறு சுகாதார குறியீட்டுகளின் இடையேயான தொடர்புகளை அடையாளம் காண முடிந்தது.
"அதிக அளவு பாதாம் மற்றும் அதிர்வெண் கொண்ட பங்கேற்பாளர்கள், பாதாம் எடுத்துக்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் அனைத்து காரணங்களுக்காக இறப்பு மற்றும் சிவிடி இறப்புக்கான ஆபத்து குறைந்த இருப்பதை நாங்கள் கவனித்தோம்" என்று ஆய்வின் ஆசிரியர்கள் எழுதியுள்ளார். ஆனால் ஆய்வு, இந்த முடிவுகள் காரணம் மற்றும் விளைவை நிரூபிக்கவில்லை, ஆனாலும் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பாதாம் பருப்புகள் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன. அதிக அளவு பாதாம் பருப்புகளை உட்கொண்ட பங்கேற்பாளர்கள் அதிக உடல் உழைப்பு, ஆரோக்கியமான உணவு, மது அருந்துதல் மற்றும் மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்வார்கள். இந்த காரணிகள் அனைத்தும் ஆயுட்காலத்தை பாதிக்கும், என்றாலும் ஆராய்ச்சியாளர்கள் இந்த அம்சங்களை தங்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil