நமது வீட்டில் நம் குடும்ப உறுப்பினர்கள் செல்லப்பிராணிகள் ஆகியோரை தவிர்த்து அழையா விருந்தாளியாக வருவது கரப்பான் பூச்சி, பல்லி, எரும்பு உள்ளிட்ட உயிரினங்கள். இவைகளை வராமல் தடுக்க பல வழிகளை முயற்சி செய்தாலும், அவற்றை கட்டுப்படுத்துவது என்பது பலருக்கும் எட்டாக்கனி தான் என்று சொல்லலாம். ஆனாலும் இதை கட்டப்படுத்தும் முயற்சி பல வீடுகளில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
தங்கள் வீடுகளில் கரப்பான், பல்லி மற்றும் எரும்பு தொல்லையை அதிகமாக எதிர்கொள்பவர்கள் இந்த டிப்சை பயன்படுத்தி அவற்றை வீட்டிற்கு வராமல் தடுக்கலாம். இதை செய்ய ஒரு ஷேம்பு பாக்கெட் இருந்தால் போதும். ஒரு கிண்ணத்தில் ஒரு பாக்கெட் ஷேம்புவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு மூடி டெட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த கலவையில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து, 2 மூடி வினிகரை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். அதன்பிறகு இந்த கலவையில் அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்து, கதவு ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்பிரே செய்துவிட வேண்டும். ஷேம்பு, பேக்கிங் சோடா, டெட்டால் ஆகிய பொருட்களின் வாசனை, கரப்பான், பல்லி, எரும்பு ஆகியவற்றிக்கு பிடிகாது.
இதன் காரணமாக இந்த ஸ்பிரே செய்த இடங்களில் கரப்பான், பல்லி, எரும்பு தொல்லை இருக்காது. ஒரு நாளைக்கு 2 முறை என ஒரு வாரம் இவ்வாறு செய்தால், கரப்பான், உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும். உங்களால் ஸ்பேரே பண்ண முடியாத இடத்தில் அதிகமாக கரப்பான் இருந்தால், ஒரு டிஸ்யூ பேப்பரில், இந்த லிக்யூடை ஸ்பிரே செய்து, அந்த பேப்பரை, கரப்பான் வரும் இடத்தில் வைத்துவிடலாம். இதை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.