செட்டி நாடு உணவுகள் எப்போதும் சுவை மிகுந்தவை. பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ள செட்டிநாடு உணவில் பல வகைகள் உள்ளன. அதில் தற்போது செட்டிநாடு கந்தரப்ப பணியாரம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ஒரு கப்
உளுந்து – கால்கப்
துருவிய தேங்காய் – கால்கப்
வெல்லம் – கால்கப்
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை :
முதலில் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து அதில் தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும். நன்றாக மாவை அரைத்தவுடன் அதில் சிறிதளவு ஏலக்காய் தூள், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மாவை கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பொன்முருவலாக வேக வைத்து எடுத்தால் சுவையாக கந்தரப்ப பணியாரம் ரெடி. இதில் எண்ணெயில் ஒரு ஒரு பணியாரமாகத்தான் ஊற்ற வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil