ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் சீக்கிய மதத்திற்கு மாறினாரா? அப்போது நடந்தது என்ன என்பது குறித்து விளக்குகிறார் எழுத்தாளர் நியாண்டர் செல்வன்.
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து மூன்று நாட்களே ஆகியிருந்தன. ஊரடங்கு உத்தரவால் பொற்கோயில் வெறிச்சோடி இருந்தது. அன்றைய தினம் பொற்கோயிலின் தலைமை குருவிற்கு ஒரு ஆங்கிலேயர் அவரை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. அப்போது அவர் எதிரே நின்றவர் ஜெனெரல் டயர். 1200 சிக்கியர்களை சுட்டுக்கொன்றவர் பொற்கோயிலில் வந்து நின்றால் எப்படி இருக்கும்?
“என்ன வேண்டும்?” மதகுரு கேட்டார்
“நான் சீக்கிய மதத்துக்கு மாறவேண்டும்.” என்றார் டயர்
அந்த வேண்டுகோளை பூசாரியால் மறுக்கமுடியாது. சடங்கை நிறைவேற்ற முனைந்தார்
“இரு நிபந்தனைகள்” என்று கூறிய டயர். “என்னால் டர்பன் வைத்துக்கொள்ள முடியாது. புகைபிடிப்பதை நிறுத்த மாட்டேன்” என கூறினார்.
“மதம் மாற அவை அவசியமில்லை. மாறிய பின் உங்கள் விருப்பம்” என்று கூறி சடங்கை நிறைவேற்றினார் மதகுரு. அதன்பிறகு டயர் சீக்கியர் ஆனார் ஆனால் மனம் மாறிவிட்டாரா? திருந்தி விட்டாரா? என்றால் அப்படி எதுவும் இல்லை. மக்களின் மனதை மாற்ற செய்த டிராமா. ஆனால் துளி பலன் இல்லை. அவர் மதம் மாறிய செய்தியை மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. வின்ஸ்டன் சர்ச்சிலே ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் கடுமையாக கண்டித்தார். ஆனால் அவனுக்கு ஆதரவு ப்ரிட்டிஷ் தரப்பில் கூடுதலா இருந்தது.
/indian-express-tamil/media/media_files/MaIzxgXeF6adN3P2MCVA.jpg)
விசாரணை முடிவில் அவன் வேலையை இழந்தாலும் இன்றைய மதிப்பில் பத்து கோடி ரூபாய் அவனுக்கு நன்கொடையாக திரட்டபட்டது. ஆனால் அதை அனுபவிக்கும் நிலையில் அவன் இல்லை. இதயநோய் வந்து படுத்திருந்தான். மரணப்படுக்கையில் “நான் செய்தது சிலர் தவறு என்கிறார்கள். சிலர் சரி என்கிறார்கள். இறப்புக்கு பின் ஆண்டவனை கேட்டு தெரிந்துகொள்வேன்” என சொல்லிவிட்டு உயிர்நீத்தான்
இன்றுவரை பல ப்ரிட்டிஷ் பிரதமர்கள் ஜாலியன்வாலா பாக் வந்துள்ளனர். ப்ரிட்டிஷ் அரசி கூட வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனால் வருத்தம் தான் தெரிவித்தார்கள் ஒழிய அதிகாரபூர்வமாக மன்னிப்பு எதுவும் இதுவரை கேட்கபபடவில்லை. 1997ல் வந்த ப்ரிட்டிஷ் ராணியின் கணவர் “ஜாலியன் வாலா பாக்கில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை இந்தியர்கள் மிகைப்படுத்தி சொல்கிறார்கள்” என சொல்லி சர்ச்சையில் சிக்கினார்
ஜெனெரல் டயரின் உடல் புதைக்கபடவில்லை.எரிக்கபட்டது. அவனது சந்ததியினர் அவனுக்கு சமாதியோ, கல்லறையோ கட்ட மறுத்துவிட்டார்கள். அவனது கொள்ளுபேரன், பேத்தி பலமுறை ஜாலியன் வாலாபாக் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு போயுள்ளனர். ஆனால் ப்ரிட்டிஷ் அரசு தான் இன்னும் திருந்தவில்லை.
என்.எம்.இக்பால், கன்னியாகுமரி
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“