தமிழ் நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வரவும், கலைஞர்களின் நிகழ்ச்சி மற்றும் பிற செய்திகளுடன் வாடிக்கையாளர்களை இணைத்து வைக்கவும், தமிழ்க்கலை.காம் என்ற இந்த வெப்-சைட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
இந்த இணையதளத்தை, தொழிலதிபர் வெங்கடேசன் ராமர் நிறுவினார். இதன் தொடக்கவிழா சமீபத்திய நாளில் சென்னையில் நடைபெற்றது.
தமிழ் கலையைச் சேர்ந்த மணிகண்டன், “தமிழ் நாட்டுப்புறக் கலைஞர்கள், உலகெங்கிலும் உள்ள வாய்ப்புகளை பெற்று கலை சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும்”, என்கிறார்.
“பல்வேறு தமிழ் நாட்டுப்புற கலை வடிவங்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை நாம் கொண்டுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கலை வடிவங்களில் பல அழிந்து வருகின்றன, மேலும் எஞ்சியவைகளை நிகழ்த்தவோ அல்லது பார்க்கவோ ஒரு தளம் இல்லை.
வெங்கடேசன், இணை நிறுவனர்களான ராம்குமார் ஆர்எஸ் ஆகியோருடன் இணைந்து நாட்டுப்புறக் கலை வடிவங்களை ஆராய்ந்து, இந்த இணையதளத்தை தொடங்க முடிந்தது”, என்றார்.
பொய்க்கால் குதிரை ஆட்டம், கும்மி ஆட்டம், கோலாட்டம், கணியன் கூத்து, புரவி ஆட்டம், கட்டைக்கூத்து, புராண ஆட்டம், பிருந்தாவன கும்மி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகள் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டுப்புறக் கலையின் வளர்ச்சியை செயல்படுத்தும் மற்றும் கலைஞர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கும் ஒரு நிலையான குழுவை அமைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil