scorecardresearch

இந்த ட்ரிக் தெரிஞ்சா இலை ஆய்வது ஈசி… இனி அடிக்கடி கொத்தமல்லி சட்னி வைப்பீங்க!

Tamil Kitchen Hacks : ஆரோக்கிய வாழ்விற்கு கொத்தமல்லி அவசியம் என்றாலும் கூட கொத்தமல்லி இலைகளைப் பறித்து, அதை நறுக்குவது என்பது உண்மையில் கடினமான வேலைதான்.

Tamil Kitchen Hacks Update : இந்திய சமையல் அறையில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்று கொத்தமல்லி. இதன் இலை மற்றும் விதை இரண்டுமே பெரிய நோய்களை குணப்படுத்தும மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உணவின் சுவை அதிகரிக்க கொத்தமல்லி முக்கிய மூலிகை தாவரமாக பயன்படுகிறது.

ஆனால் எவ்வளவுதான் மருத்துவ குணங்கள் நிறைந்தது ஆரோக்கிய வாழ்விற்கு கொத்தமல்லி அவசியம் என்றாலும் கூட கொத்தமல்லி இலைகளைப் பறித்து, அதை நறுக்குவது என்பது உண்மையில் கடினமான வேலைதான். ஆனால் இதை செய்வதற்கு எளிமையாக வழி ஒன்று உள்ளது. கொத்தமல்லி இலைகளை அதன் தண்டுகளிலிருந்து தனியாக பிரித்து எடுப்பதற்கு, ஒரு அற்புதமான ஹேக் சமீபத்தில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

இந்த வழிகளை பின்பற்றி சில விநாடிகளில் கொத்தமல்லி இலைகளை அதன் தண்டிலிருந்து கொத்தமல்லி இலைகளை எளிதாக பிரித்து எடுக்க முடியும். அது என்ன வழி என்று யோசிக்கிறீர்களா…கொத்தமல்லி இலைகளை எதிதான பிரித்தெடுக்க அற்புதமான ஹேக் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் @earthtalant என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.. இந்த வீடியோவில் ஒரு கொத்தமல்லி இலைகளை பிரித்தெடுக்க ஒரு பிளாஸ்டிக் கூடையை பயன்படுத்துகிறார்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கும் போது நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளஸ்டிக் கூடையில், கொத்தமல்லியை எடுத்து, கூடையில் உள்ள துளைகள் வழியாக வைத்து, மறுமுனையிலிருந்து வெளியே இழுப்பதால், கொத்தமல்லியின்  அனைத்து இலைகளும் கூடையில் விழுந்து விடுகிறது. மறுமுனையில் கொத்தமல்லியின் தண்டு வெளியில் வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோ இதுவரை, 147 மில்லியன் பார்வைகளையும் 4.5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதே முறையில் புதினா மற்றும் கீரைகளை தண்டில் இருந்து பிரித்து எடுக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil kitchen hacks remove coriander leaves from stem easy way