மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல, அது பண்பாட்டு அடையாளம்.
இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன.
அந்தவகையில், நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களைவிட தமிழ் (இலக்கியம்) ஆயிரம் ஆண்டுகள் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
தமிழின் மிகச் சிறந்த படைப்புகளான சங்கப் பாடல் தொகுப்புகள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. உலகின் எந்த தொன்மையான மொழியிலும் இல்லாதபடி தமிழின் பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் மதம் சாராதவை, கடவுளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவை, வாழ்க்கையைப் பேசுகிறவை.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தமிழ் மொழி, புற்றீசல் போல உலகம் முழுவதும் பரவியுள்ளது. மற்ற மொழி பேசும் மக்கள் கூட தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அதை கற்று, பேசி வருகின்றனர்.
அப்படி ரஷ்ய இளைஞர் ஒருவர் தமிழ் பேசும் வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது.
அசிர் ரஹ்மான் என்ற அந்த ரஷ்ய இளைஞர், இன்ஸ்டாகிராமில் தமிழில் பேசி வீடியோ பதிவிட்டு வருகிறார்.
’ஹாய் பிரண்ட்ஸ் எப்படி இருக்கீங்க, இன்னைக்கு நல்ல வெயில் அடிக்குது, ஊட்டி, கொடைக்கானல் மாதிரி இருக்கு’ என்று அவர் சிரித்துக் கொண்டே பேசும் போது நம்மையும் அறியாமல் ஒரு நமக்குள் புன்னகை பூக்கிறது.
மேலும் அசிர் Tamil in Russia எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில், ரஷ்யாவில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, கலாச்சாரம் மற்றும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றி தமிழில் பேசி வீடியோ பதிவிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் வாழும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம், மற்ற மொழிகள் கற்ற ஊக்குவிக்கும் போது, ஒரு ரஷ்ய இளைஞர் தமிழ் பேசுவதைப் பார்த்த தமிழ் நெஞ்சங்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அசீர் போன்ற தமிழை நேசிக்கும் உள்ளங்கள் இருக்கும் வரை, உலகம் முழுவதும் தமிழ் மொழி வாழ்ந்து கொண்டிருதான் இருக்கும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“