மதியம் சமைத்த சாதம், இரவிலும் ஃப்ரஷ்ஷாக இருக்க... இப்படி செய்யுங்க!

Tamil Heath Update : குக்கரில் செய்வதை விட அடுப்பில் உரை வைத்து செய்யும் சாதமே ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.

Tamil Heath Update : குக்கரில் செய்வதை விட அடுப்பில் உரை வைத்து செய்யும் சாதமே ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.

author-image
WebDesk
New Update
மதியம் சமைத்த சாதம், இரவிலும் ஃப்ரஷ்ஷாக இருக்க... இப்படி செய்யுங்க!

Tamil Lifestyle Update : உலக நாடுகள் பலவற்றில் அரசி உணவு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல பகுதிகளில் குறிப்பாக தென்னிந்தியாவில் முக்கிய பிரதான உணவாக அரிசி சாதமே மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். முன்பு அடுப்பில் உலை வைத்து சமைக்கப்பட்ட சாதம் தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் குக்கரில் செய்யப்படுகிறது. கிரமங்களில் கூட பலரும் குக்கரை பயன்படுத்தி வரும் சுழல் நிலவி வருகிறது. ஆனால் குக்கரில் செய்வதை விட அடுப்பில் உரை வைத்து செய்யும் சாதமே ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.

Advertisment

அப்படி அடுப்பில் செய்யப்படும் உணவு ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பிறகு கெட்டுப்போடும் நிலை ஏற்படும் . உதாரணத்திற்கு காலையில் செய்த சாதம் மாலையில் ஒரு மாதிரியான பிசு பிசு தன்மையும் சாப்பிடுவதற்கு ஏற்புடையதல்லாத நிலைக்கு செல்லும். அந்த நிலை வரும்போது அதை வெளியில் கொட்டுவதை விட வேறு வழி இல்லை. ஆனால் தற்போது இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சில குறிப்புகள் உள்ளது.

வடித்த சாதம் கெட்டுப்போவதற்கு முக்கிய காரணம். தண்ணீர் பற்றாக்குறை. இதனை கருத்தில் கொண்டு உலை வைக்கும்போது தண்ணீர் அதிகம் வைக்க வேண்டும்.  மேலும் உலை அதிகம் கொதிக்கவீடாமல். லேசாக கொதி வந்ததும், அரிசியை உலையில் போட வேண்டும். அப்போது தண்ணீர் பாத்திரத்தில் நிரம்பி வழியும் அளவிற்கு இருக்க வேண்டியது காட்டாயம். உலை பாத்திரத்தில் அரிசி போட்டவுடன் தண்ணீர் நிரம்பி வழிந்தால் அமை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, சாதம் வெந்து வரும்போது தண்ணீபு பற்றாக்குறை ஏற்பாட்டால் இந’த தண்ணீலை அதில் சேர்க்கலாம்.

உலையில் அரிசி சேர்த்தவுடன் அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டியது காட்டாயம். சாதம் கொதிக்க தொடங்கிய பின்பு, கரண்டியை விட்டு அடிக்கடி கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சாதம் சரியான பக்குவத்திற்கு வந்த்தும் வடித்துவிட வேண்டும். இதில் சாதம் வடிக்கும்போது பத்து நிமிடங்கள் வரை சாதம் நன்றாக நடிக்க வேண்டியது கட்டாயம். அப்போதுதான் கஞ்சி நன்றாக வடியும்.

Advertisment
Advertisements

சில சமயங்களில் சாதம் வேகவைத்து வடிக்கும் பதம் தவறுவது இயல்பான ஒன்று. இந்த நேரத்தில், சாதத்தை அடுப்பில் அடுப்பின் மீது வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு நிமிடம் வடித்த சாதத்தை சூட்டோடு அடுப்பின் மேலே வைத்து வைதால் சாத்தில் உள்ள தண்ணீர் சுண்டி விடும். சாதம் சரியான பக்குவத்திற்கு வந்து விடும். சாதம் வேகும்போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிரிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: