Advertisment

இதை கண்டிப்பாக பெண்கள் அணிய வேண்டுமா? Bra பற்றிய 3 வதந்திகள்

ப்ரா அணிவது அல்லது அணியாதது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
braless benefits

ப்ராலெஸ்ஸுக்கு செல்வது பெண்களின் உடலை இயல்பாக்குவதற்கும், பெண்ணின் மார்பை பற்றிய தவறான எண்ணத்தை குறைப்பதற்கும் ஒரு சிறிய படியாகும்.

அண்டர்வைர் ​​ப்ரா அணிவது மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி நீங்கள் கெட்டிருந்தால் அந்த கூற்று பொய்யானது.  இதுபோன்ற தவறான கருத்துக்கள் மக்களிடையே குழப்பத்தை அதிகரிக்க மட்டுமே உதவுகின்றன என்று மருத்துவர் ஒரு குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

உண்மையில் நீங்கள் ப்ரா அணிய வேண்டுமா? அல்லது பிரா அணிவதற்கு அறிவியல் காரணம் உள்ளதா? என்ற கேள்விக்கு டாக்டர் தனயா நரேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளர்.

அவரது கூற்றுப்படி, “ப்ரா அணிவது அல்லது அணியாதது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதை புரிந்துகொள்வது மிகவும் அவசியம், ப்ராக்கள் பற்றிய கட்டுக்கதைகளை உடைக்க, ஹெல்த் ஷாட்ஸ் டாக்டர் அர்ச்சனா தவான் பஜாஜ், மகப்பேறு மருத்துவர், மகப்பேறியல் நிபுணர் மற்றும் ஐபிஎஃப் (IVF)  நிபுணர் கிளினிக் சார்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.

உலகெங்கிலும் உள்ள பெண்கள் தங்கள் பிரா அணிவதை விரும்புகின்றனர். அதிலும் சிலர் நாள் முழுவதும்  அணிந்துகொள்கிறார்கள்.  ஏனென்றால் பிரா அணியவில்லை என்றால் தங்கள் வெறுமனே இருப்பதாக உணர்கின்றனர் என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் பிரா பயன்படுத்துவதை தங்களது கடமையாக கருதுகின்றனர்.

நீங்கள் ப்ரா அணியலாமா வேண்டாமா என்பது உங்களது தனிப்பட்ட விருப்பம், இருப்பினும், சில நேரங்களில் அவர்களின் முடிவுகள் ப்ராக்கள் பற்றிய சில கட்டுக்கதைகளால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது, அவை உண்மையல்ல எனவே, ப்ரா அணியலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க இந்த கட்டுக்கதைகளை நம்பி முடிவு செய்யாதீர்கள். என்பது டாக்டர்களின் கருத்தாக உள்ளது.

ப்ராக்கள் பற்றிய 3 கட்டுக்கதைகள்

 அண்டர்வயர் ப்ராக்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன

1990-களில் சில ஆராய்ச்சிகள், அண்டர்வைர் ​​ப்ராக்கள் மார்பகத்தில் உள்ள நச்சுப் பொருள்களை அடைப்பதன் மூலம் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கூறியது. அதேபோல் அண்டர்வைர் ​​ப்ராக்கள் நீண்ட நேரம் அணிவது சங்கடமாக இருக்கும், இருப்பினும் இந்த கட்டுக்கதையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை, மேலும் இந்த கூற்று உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை.

இரவில் தூங்கும்போது படுக்கைக்கு செல்லும் போது ப்ரா அணிவது மார்பக புற்றுநோயை உண்டாக்கும்

தூங்கும்போது  ப்ரா அணிவது மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் ப்ரா அணிந்து படுக்க வசதியாக இருந்தால், நீங்கள் அதை செய்யலாம். ஆனால் இவ்வாறு பிரா அணிவது புற்றுநோயை உண்டாக்காது என்பதை அறிந்து அதைச் செய்யலாம். உங்கள் மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது கட்டிகளைக் கண்டறியும் வரை நீங்கள் கவலைப்படாமல் இரவில் தூங்கும்போது பிரா அணியலாம்.

ப்ரா பட்டைகள் முதுகு வலியை ஏற்படுத்தும்

இது ஒரு கட்டுக்கதை, ஏனெனில் சரியான அளவிலான ப்ரா வசதியை மட்டுமே தரும், அதே சமயம் தவறான அளவிலான ப்ரா சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். எனவே, உங்கள் ப்ரா உங்களுக்கு முதுகுவலியைக் கொடுப்பதாக உணர்ந்தால், உங்கள் ப்ரா அளவை சரிபார்க்க வேண்டுமே தவிர பிரா அணிவதால் தான் முதுகுவலி உண்டாகிறது என்பதை நம்பி முடிவு செய்ய வேண்டாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment