/indian-express-tamil/media/media_files/2025/04/17/cFMji3WdtpWhid6bOpxF.jpg)
நமது தினசரி உணவில் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் வந்துவிட்டால், இந்த மருந்துகள் தெளித்து வளர்ந்த காய்கறிகள், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தகவல்கள் இணையத்தில் அதிகம் பரவி வருவதால், பலரும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தங்கள் வீட்டு தோட்டத்திலோ? அல்லது மாடி தோட்டம் வைத்தோ வளர்த்துக்கொள்கின்றனர்.
இப்படி வளர்க்கப்படும் செடிகளுக்கு, நோய் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். குறிப்பாக மாவு பூச்சி பிரச்னை செடிகளின் இறப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பூச்சிகளை விரட்ட, ரசாயண முறையில், பல மருந்துகள் இருந்தாலும், நாம் இயற்கை பொருட்களை வைத்து எப்படி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது குறித்து, வேளான் டாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
மாவுப்பூச்சி, செடியின் இலைகள் மற்றும் தண்டுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த பூச்சியின் தாக்குதல் இருந்தால் இலை மஞ்சள் நிறத்திற்கு மாறி காய்ந்துபோய்விடும். மாவுப்பூச்சி எங்கு இருக்கிறதோ அங்கு, வெள்ளை நிறத்தில் இருக்கும் எரும்புகள் அங்கு அதிகம் இருக்கும். இந்த பூச்சி வருடத்திற்கு 400-600 முட்டைகள் இடும். செம்பருத்தி, மிளகாய், கத்திரிக்காய், பப்பாளி உள்ளிட்ட செடிககளில் இந்த மாவுப்பூச்சி இனம் அதிகம் இருக்கும்.
குளிர்ந்த தண்ணீரை செடி முழுவதும் அடித்துவிட்டாளே மாவு பூச்சி அழிந்துவிடும். அடுத்து இஞ்சி,பூண்டு மிளகாய் ஆகியவற்றை இடித்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, ஸ்பிரே போன்று அடித்தால் இந்த மாவுப்பூச்சி தொல்லை இருக்காது. 3-வது வழிமுறை பழைய சோறு வைத்து செய்யலாம். ஒரு லிட்டர் பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து பாதியளவு தண்ணீர் நிரப்பி, அதில் பழைய சோற்றை சேர்த்து நன்றாக குளுக்கிவிடவும்.
7 நாட்களுக்கு இவ்வாறு குளுக்கும்போது மோர் போன்ற ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு தெளித்து வந்தால், மாவுப்பூச்சி தொல்லை இருக்காது. இந்த முறைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டு செடிகளில் இருக்கும் மாவுப்பூச்சியை விரட்டலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.