பொதுவாக வீட்டில் சமையல் வேலை செய்வதை விட பாத்திரங்களை கழுவுவது தான் பெரிய வேலையாக இருக்கும். பெண்கள் சமைப்பதை விட, இதை செய்வது தான் பெரும் தலைவலியாக நினைப்பார்கள். மற்ற நாட்களில் கூட, சமாளித்து பாத்திரத்தை கழுவிவிட்டாலும், விழாக்காலங்கள், பண்டிகை நாட்கள், என வரும்போது. சமையலும் அதிகமாககும், அதேபோல் கழுவ வேண்டிய பாத்திரங்களும் அதிகமாக இருக்கும்.
அதேபோல், குளிர் காலத்தில், இந்த வேலைகளை செய்வது மிகவும் கடினமான ஒன்று. இந்த காலக்கட்டத்தில், குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், தண்ணீரில் கை வைத்தாலே ஐஸ் வைத்தது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் பல பெண்கள், எப்படி பாத்திரத்தை கழுவுவது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். இப்படி, பாத்திரம் கழுவ கஷ்டப்படும் பெண்களுக்கு இப்படி ஒரு டிப்ஸ் இருக்கிறது என்று தெரிந்தால், பாத்திரம் கழுவுவது கஷ்டமே இல்லை.
எவ்வளவு பாத்திரங்கள் இருந்தாலும், அதை ஈஸியாக கழுவுவதற்கு இந்த முறையை பயன்படுத்தலாம். 2 பிளாஸ்டிக் கை உறை அல்லது பிளாஸ்டிப் பேப்பரை எடுத்து கைககளில் கட்டிக்கொள்ளவும். அந்த பிளாஸ்டிக் பேப்பருக்கு மேல், ஷூ சாக்ஸை போட்டுக்கொள்ளுங்கள். அந்த சாக்ஸ் அவிழ்ந்துவிடாமல் இருக்க, கையில் தலைக்கு போடும். லப்பர் பேண்ட் போட்டுக்கொள்ளவும். இப்போது நீங்கள் தண்ணீரை தொட்டாலும் சாக்ஸ் நனைந்தாலும் குளிர் உங்கள் கைகளில் தெரியாது.
அதேபோல், கையில் போட்டிக்கும் ஷூ சாக்ஸ் வைத்து பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் சோப், அல்லது லிக்யூடில் நனைத்தால், அதில் இருந்து அதிகமாக நுறை வரும். இதன் மூலம் அதிகப்படியான பாத்திரங்களை கழுவலாம். சோப் அல்லது லிக்யூடு மிச்சமாகும். பாத்திரங்கள் கழுவுவதும் ஈஸியாக முடியும். எவ்வளவு அதிகமான பாத்திர்கள் இருந்தாலும், இந்த முறையை பயன்படுத்தலாம். எளிதாக வேலை முடியும். செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“