Advertisment

அல்போன்சா, நீலம்... டாப் 5 மாம்பழ ரகங்கள்; அடையாளம் கண்டு பிடிப்பது எப்படி?

Tamil Health Update : சந்தையில் இருக்கும் பல்வேறு வகையான மாம்பழங்கள் நமக்கு திகைப்பை ஏற்படுப்படுத்தி இருக்கலாம் எந்த மாம்பழம் எப்படி இருக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறியும் இருக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அல்போன்சா, நீலம்... டாப் 5 மாம்பழ ரகங்கள்; அடையாளம் கண்டு பிடிப்பது எப்படி?

கோடை வந்தால் பலரும் வெப்பத்தின் காரணமாக அஞ்சினாலும் மாம்பழ சீசன் என்று சந்தோஷப்படுபவர்களும் உண்டு. குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடடிய இந்த மாம்பழம் சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தின் அடையாளமாகவும் உள்ளது. இந்த மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.

Advertisment

சந்தையில் இருக்கும் பல்வேறு வகையான மாம்பழங்கள் நமக்கு திகைப்பை ஏற்படுப்படுத்தி இருக்கலாம் எந்த மாம்பழம் எப்படி இருக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறியும் இருக்கலாம். ஆனால் இப்போது அதற்கு பல வழிகள் உள்ளது. மாம்பழத்தை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்று நீங்கள் கற்றுக்கொண்டாலும், மற்றொன்றை விட எது சிறந்தது என்று சொல்வது கடினம்.

தோதாபுரி

இந்த வகை மாம்பழம் தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விளைகிறது. இந்த மாம்பழ வகையின் முனைகள், கிளியின் மூக்கைப் போன்று இருப்பதால், தோதாபுரி என்று பெயர். ஹிந்தியில் "டோட்டா" என்றால் "கிளி" என்று பொருள். சுவையில் லேசானது. இந்த பழம் பழுத்தாலும் பச்சை நிறமாகத்தான் இருக்கும் இனிப்பு சுவை இருக்காது. தோதாபுரி அதன் இனிப்பு-புளிப்பு சுவை காரணமாக ஊறுகாய் மற்றும் சாலட்களுக்கு சிறந்தது.

கேசர்

இந்த வகை மாம்பழம் சௌராஷ்டிரா பகுதியிலும் குஜராத்தின் கட்ச் பகுதிகளிலும் விளைகிறது. நீங்கள் இந்த மாம்பழங்களை வீட்டிற்கு கொண்டு வரும்போது, ​​​​உங்கள் வீடு, நீங்கள் அவற்றை சேமித்து வைக்கும் குளிர்சாதன பெட்டி, பரலோக வாசனையால் கமகமக்கும். இதன் நறுமணம் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும், குங்குமப்பூ அல்லது "கேசரி" நிற உள்ள தோல் மற்ற வகைகளை விட பச்சையாக இருந்தாலும் தோள்பட்டைகளில் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. கேசர் மாம்பழம் "மாம்பழங்களின் ராணி" என்று அழைக்கப்படுகிறது.

சஃபேடா/பங்கனபள்ளி

இந்த வகை பழம் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் பனகன்பள்ளே பகுதியில் விளைகிறது. இந்த ரகம்தான் சந்தைகளுக்கு சீக்கிரமாக வந்து சேரும். இதன் தோல் அழகான பிரகாசமான கிட்டத்தட்ட மாசற்ற மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது. பாகனப்பள்ளி மாம்பழங்கள் ஓவல் வடிவத்தில் இருக்கும். இந்த வகை மாம்பழங்கள் நார்ச்சத்து இல்லாதது. புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும்.

அல்போன்சோ/ஹபுஸ்

இந்த வகை மாம்பழங்கள் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டாலும், குஜராத் மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவின் விலை உயர்ந்த மாம்பழ வகைகளில் இதுவும் ஒன்று. இது சிவப்பு நிறத்துடன் மஞ்சள் நிற தோலுடன் இருக்கும். கோள வடிவத்தில் உள்ளது. இந்த மாம்பழம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நீலம்

இந்த வகை மாம்பழம் ஹைதராபாத்தில் விளைகிறது, ஆனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது. இந்த மாம்பழங்கள் மற்ற மாம்பழ வகைகளை விட சிறியதாக இருக்கும். இவறறின் தோல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பொதுவாக ஜூன் மாதத்தில் இந்த பழங்கள் சந்தையில் ஏராளமாக கிடைக்கும். அவை இனிமையான நறுமணத்தைக் கொண்டது. மிகவும் இனிப்பாக இருக்கும். இதன் சுவை உங்கனை சொர்கத்திற்கே அழைத்துச்செல்லும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment