மனிதனின் உணவுப்பழக்கம் மாறி வரும் நிலையில், அவர்களுடன் நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. மனிதனின் சராசரி ஆயுட்காலம் குறைந்துகொண்டே வருகிறது. ,இதனால் பலரும் பாரம்பரிய உணவை தேடி சென்று வருகின்றனர். ஆனாலும் ஒருவர் தினசரி ஒரு முறையாவது பாஸ்ட் புட் உணவைத் தேடி சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி செல்பவர்கள் தங்களை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கை உணவுகள் பல உள்ளன. அந்த வகையில் தற்போது நமது உடலுக்கு பல வகை நன்மைகளை கொடுக்கும் புதினா ரசம் பற்றி தெரிந்துகொள்வோம்.
புதினா இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனை வைத்து ரசம் வைக்கும்போது அதன் மருத்துவ குணம் நேரடியாக நமக்கு கிடைக்கும். இப்போது புதினா ரசம் எப்படி வைப்பது என்று பார்க்கலாம் :
தேவையான பொருட்கள் :
தக்காளி - 2
புதினா - ஒரு கப்
புளி - சிறிதளவு
எண்ணெய் - 1 டிஸ்பூன்
சீரகம் - 1 டிஸ்பூன்
மிளகு - 1 டிஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டிஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
எண்ணெய் - 1 டிஸ்பூன்
கடுகு - 1/2 டிஸ்பூன்
சீரகம் - 1/2 டிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை :
தக்காளியின் பாதியையும், புதினாவையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த புதினா பேஸ்ட் மற்றும் புளி தண்ணீரை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை காய்ச்சவும். அடுத்ததாக கிண்ணத்தில் மீதி தக்காளியை கையிலேயே கரைத்து அரைத்த மிளகு சீரத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக உப்பு , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைத்துள்ள புதினா மற்றும் மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். கிண்ணத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். நுரை பொங்கி வரும்போது உடனே அதன் மீது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து ரசத்தில் ஊற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள் சுவையான புதினா ரசம் ரெடி.
விருந்து நிகழ்ச்சியில் ரசம் இல்லாமல் முழுமை பெறாது. அதற்கு புதினா ரசம் ஒரு சிறந்த ஜீரன உணவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் புதினா உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil