Tamil Lifestyle Update : இந்தியா முழுவதும் குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் காலையில் முக்கிய உணவாக இருப்பது இட்லி. அரிசி மற்றும் உளுந்தம் மாவு சேர்த்து செய்யப்படும் இந்த இட்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது.
இட்லி செய்முறை மிகவும் எளிதான ஒன்றுதான் என்றாலும் அது பஞ்சு போன்ற மெனமையாகவும் துணிகளில் ஒட்டாமலும் வருவதற்கு கொஞ்சம் சிரமப்படவேண்டியது அவசியம். இட்லி பானையில் இட்லியை ஊற்றுவதற்கு காட்டன் துணிகளை பயன்படுத்துவது. அவசியம் அதிலும் இட்லி வெந்தவுடன் அதை எடுக்கும்போது துணிகளில் ஒட்டாமல் வருவது மிகவும் முக்கியம். அதற்காக இடலி தட்டில் மாவை ஊற்றுவதற்கு முன்பு தட்டில் சிறதளவு எண்ணெய் தடவி விட்டு ஊற்றினால் இட்லி தட்டில் ஒட்டாமல் இட்லி அழகாக வரும்.
இதே போன்று ஒரு சில வழிகளில் இட்லி தட்டில் ஒட்டாமலும், மென்மையாகவும் செய்யலாம். இதற்கு முதலில் இட்லி அவிக்க பயன்படுதம் காட்டன் துணிகளை நனறாக துவைத்து வெளியில் உலர வைப்பது கட்டாயம். முதலில் இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் இட்லி மென்மையாக கிடைக்கும். இந்த முறையில் இட்லி கிடைத்தா மாவில் இட்லி செய்யும்போது அது மெனமையாகவும், இட்லி துணிகளில் ஒட்டாமலும் கிடைக்கும்.
அதேபோல் நீங்கள் இட்லிக்கு ஊற்றும் மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கி விட்டு பின்னர் இட்லி தட்டில் அவிய விட்டு எடுத்தால் இட்லி ஒட்டாமல் சூப்பராக வரும்.இட்லிக்கு மாவு அரைக்கும் போது நாலு பங்கு அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து சேர்த்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி, ஒரு தேக்கரண்டி வெள்ளை அவல் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் இட்லி மென்மையாக கிடைக்கும். இட்லி ஊற்றும் பொழுதும் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் சூடேறியதும் ஒரு முறை அந்த துணியை தண்ணீரில் நனைத்து எடுத்து பின்னர் பயன்படுத்தலாம்.
தொடர்ந்து இட்லி பானையில் மாவை ஊற்றிவிட்டு பத்து நிமிடத்திற்கு மேல் இட்லியை அவிக்க இந்த முறையில் இட்லி அவித்தால் தான் இட்லி துணியில் இட்லி சிறிதும் ஒட்டாமல் மிருதுவாக கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil