தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் தோசை ஒரு முக்கிய உணவாக அனைவராலும் உண்ணப்படுகிறது. புளித்த அரிசி மற்றும் உளுந்தம் மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தோசை, ஒரு சிறந்த காலை உணவாகும். இது உடலுக்கு ஆரோக்கியமானது, ஏனெனில் உளுத்தம் பருப்பு, புரதத்தின் நல்ல மூலமாகும்.
இந்த தோசை தடிமனாக மென்மையான மிருதுவாக என பல வகைகளில் தயார் செய்யலாம். ஆனால் இதில் பலரும் மிருதுவான தேசையை விரும்பி சாப்பிடுகினறனர். ஆனால் மிதுவான தோசை செய்வதற்கு சில தந்திரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனாலும் தவாவை டிஷ்வாஷர் ஸ்க்ரப்பரைக் கொண்டு கடுமையாக ஸ்க்ரப் செய்வது, அதன் அமைப்பைப் பாதிக்கலாம், அந்த சிக்கலை தீர்க்க சில உடனடி ஹேக்குகளை முயற்சிக்கலாம்.
உங்கள் தோசை மிருதுவாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், உங்கள் தவாவை புத்தம் புதியதாக வைத்திருக்க, ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர் ஜூஹி கபூர் என்பவர் எளிய சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்!
இதற்கு முதலில் வார்ப்பிரும்பு தவாவில் சமைப்பதன் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். வார்ப்பிரும்பு பாத்திரங்கள் பாரம்பரியமாக சமையலுக்கு சிறந்ததாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. "டெஃப்ளான் மற்றும் ஒட்டாத பாத்திரங்கள் இயற்கையில் நச்சுத்தன்மை கொண்டவை.. ரசாயனம் கலந்துள்ளதால், இது உங்கள் உணவில் லீச் செய்து ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது," கூறியுள்ளார்.
மேலும் வார்ப்பிரும்பு பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் அன்றாட உணவில் இரும்புச்சத்து சேர்க்கப்படுகிறது, இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் இரும்பு தவா ஒட்டாதது போல் செயல்படுவதை உறுதிசெய்ய" மூன்று எளிய வழிகள் உள்ளன.
எண்ணெயில் ஊறவைத்த வெங்காயத்தை தவாவின் மேற்பரப்பில் தேய்க்கவும். தவா மிகவும் க்ரீஸ் ஆகிவிடும் என்பதால் தோசை மேற்பரப்பில் ஒட்டாமல் இருக்கும்.
தோசைகளை மட்டுமே செய்ய எப்போதும் உங்கள் தோசை தவாவைப் பயன்படுத்துங்கள். ஆனால் பராத்தா, ரொட்டி மற்றும் சாண்ட்விச் செய்ய இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
உங்கள் தவாவை சுத்தம் செய்த பிறகு ஒரு துணியால் துடைத்து, 2-3 சொட்டு எண்ணெயை தடவி வைக்கவும். இது தவா க்ரீஸாக இருப்பதை உறுதிசெய்யவும்.
நீங்கள் புதிதாக மாவைத் தயாரிக்கிறீர்கள் என்றால், பொருட்களின் அளவு குறித்து கண்டிப்பாக கவனம் செலுத்துங்கள்.
நான்கு கப் அரிசி மற்றும் ஒரு கப் உளுத்தம் பருப்பை சுமார் நான்கு மணி நேரம் அல்லது ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி அல்லது ஒரு நியமிக்கப்பட்ட இட்லி மாவு கிரைண்டரில் அரைக்கவும்.
இட்லி தயாரிக்கப் பயன்படும் புழுங்கல் அரிசி தோசைக்கும் ஏற்றதாகுமம். மாவை கலக்கும்போது சுவைக்கேற்ப கல் உப்பு சேர்க்கவும்.
குளிர்சாதனப் பெட்டியில் மாவை வைத்தால் தோசை செய்யத் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அதை வெளியில் வைக்கவும்.
இப்போது, ஒரு நான்-ஸ்டிக் தவாவில் மாவை ஊற்றுவதற்கான நேரம் இது. தவா போதுமான அளவு சூடாக இருக்கிறதா என்று சரிபார்க்கவும். அதன் மேல் சிறிது தண்ணீர் தெளிக்கவும். சலசலக்க ஆரம்பித்தால், தவா போதுமான அளவு சூடாக இருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள் தோசை தயார் செய்ய ஆரம்பிக்கலாம்.
தவாவை சிறிது எள் எண்ணெய் கொண்டு ஈரப்படுத்தலாம். அரை வெங்காயத்தை தவாவில் சமமாக எண்ணெய் பரப்ப பயன்படுத்தலாம்.
கடாயில் தேசை மாவை ஊற்றிய பின் 1 டீஸ்பூன் எண்ணெயை நடு மற்றும் பக்கவாட்டில் ஊற்றி ஒரு நிமிடம் விடவும். அடுப்பை மிதமான தீயில் கொண்டு வாருங்கள். வெளிப்புற விளிம்புகளிலிருந்து மெதுவாக அதை அகற்றி உருட்டவும். இறுதியில் மிருதுவான தோசை பரிமாற தயாராகிவிடும்.
அல்ட்ரா மிருதுவான தோசைக்கு, சிறிது எண்ணெய் சேர்த்து, பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் நீண்ட நேரம் சமைக்கவும். பின்னர் மறுபுறம் திருப்பவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.