Tamil Lifestyle Milk Payasam : பொதுவாக இனிப்பு சுவை அனைவருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு தவிர்க்க முடியாத ஒரு சுவை. அனிப்பு சுவையில் பல உணவு பொருட்கள் இருந்தாலும் அதில் பாயாசத்திற்கு தனி இடம் உண்டு. விருந்து நிகழ்ச்சிகள் பாயாசம் இல்லாமல் இருக்காது என்றே கூறலாம். இதில் பலருக்கும் பால்பாயசம் என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.
இந்த பாயாசம் பல பலவழிகளில் பல பொருட்களை வைத்து செய்யப்படுகிறது. அவ்வாறு எந்த முறையில் பாசாசம் செய்தாலும், அடுப்பில் பாத்திரத்தை வைத்து செய்வது வழக்கம். ஆனால் இந்த பதிவில் குக்கரை பயன்படுத்தி பாயாசம் அதிலும் பால்பாயாசம் செய்வது எப்படி என்பதை காணலாம்.
தேவையான பொருட்கள் :
பால் – 1/12 லிட்டர்
சர்க்கரை – ஒரு கப்
பச்சை அரிசி – கால்கப்
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
மில்க் மேட் – ஒரு டின்
பாதாம், பிஸ்தா – சிறிதளவு
செய்முறை :
முதலில் குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு அதில் பச்சை அரிசையை நன்றாக வறுக்கவும். அதன்பிறகு அதில் ஒன்னறை லிட்டர் பாலை ஊற்றி நன்றாக கலக்கவும். அதன்பிறகு பால் நன்றாக கொத்தித்து வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
நன்றாக கொத்தித்து வந்ததும் பிரஷர் குக்கரை மூடி விசில் வைத்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். அப்போது அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குக்கரின் முடியை திறந்து பாலை நன்றாக கலக்கி விட்டு ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும்.
அதன்பிறகு மீண்டும் குக்கரை மூடி 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நேரம் முடிந்ததும் குக்கரை திறந்து அதில் மில்க் மேட் ஒரு டின் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்தவுடன் இறக்கி அதில் பாதம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து பறிமாறலாம். தேவைப்பட்டால் இவற்றை நெய்யில் வறுத்தும் நீங்கள் பயன்படுத்தலாம். சுவையான பால் பாயாசம் தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil