எடைக் குறைப்பு முதல் தோல் மினுமினுப்பு வரை… கொய்யா இலையை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

எடை குறைப்பு முதல் முடி உதிர்வு தோல் பராமரிப்பு வரை கொய்யா இலைகள் அனைத்து பயன்களையும் கொடுக்கும்.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோன தொற்று பாதிப்பு, இயற்கை உணவுகளின் முக்கியத்துவத்தை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் எந்த உணவை அதிகம் சாப்பிடவேண்டும், எந்த உணவை தவிர்ப்பது, எதை குடிப்பது என்று சந்தேகம் இருக்கலாம். இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு புத்தகம், இணையதளம் என பல வழிகளில் நீங்கள் முயற்சி செய்திருக்கலாம். ஆனால், கொய்யா இலையின் ஆரோக்கியம் பற்றி நீங்கள் படித்த அனுபவம் உள்ளதா? கொய்யா இலை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், இது ஒரு அழகு சாதனமாகவும் பயன்படுகிறது.

அந்த வகையில் கொய்யா இலையின் மகத்துவம் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம் :

கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யாவின் இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்திற்கான  தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த தேநீரை நாமே எளிதாக தயார் செய்யலாம். சிறிது தண்ணீரைக் கொதிக்கவைத்து, கொய்யா இலைகளை அதில் ஊறவைத்து, கலவையை குடிக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொய்யா இலை தேநீர் குடிப்பதால் சிறப்பான நன்மை கிடைக்கும். இது வயிற்றுப் பிடிப்பைத் தணிக்கும் மற்றும் விரைவான மீட்சியை சரி செய்யும். ஒரு கப் சூடான நீரில் இலைகளைச் சேர்த்து, பின்னர் அதை வடிகட்டி வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். மேலும், வாய்வழியாக எடுத்துக்கொள்ளப்படும் திரவமாக இருப்பதால், இந்த தேநீர் உட்கொண்ட உடன் உடல் நீரேற்றமாகவும் இருக்கும்.

உடல் எடையை குறைக்க கொய்யா இலை தேநீர் பெரிய உதவி செய்யும், கொய்ய இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்பு ஆகியவை உள்ளன, எனவே, நீங்கள் லேசான குளிரில் இருக்கும்போது இந்த தேநீர் குடிக்கலாம். சளி சுவாசக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரலில்ஏற்படும் தொற்றுக்களில் இருந்து விடுபட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை  மேம்படுத்துவதற்கும் ஒரு கப் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.  முடி உதிர்வதை தடுக்கவும் கொய்யா இலை பயன்படுகிறது. உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகள் உருவாக்கும் கொய்யா இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.  மேலும், கொய்யா இல்லை தேநீர் உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil lifestyle news guava leaf benefits in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com