இன்றைய காலட்டத்தில் பலரும் நோய் தொற்றுக்கு ஆளாவதற்கு உணவு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவு எப்போதமே நமக்கு தீங்கு விளைவிக்கும். அதேபோல் காய்கறிகள் சத்தானதா என்றால் அதற்கும் ஆம் என்று சொல்லும் அளவுக்கு எந்த காய்கறி இயற்கை முறையில் வளர்க்கப்பட்டது. எது செயற்கையாக தயாரிக்கப்பட்ட விதையில் இருந்து வந்தது என்பதை கண்டறிவது பெரும் பாடாக இருக்கும்.
Advertisment
இந்த நிலையை சமாளிக்கலே விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு இது சாத்தியமாகும். ஆனால் நகரத்தில் உளள மக்களுக்கு இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டால் மாடித்தோட்டம் என்ற ஒரு முறையின் மூலம் நமக்கு தேவையான காயகறிகளை நாமே விளைவித்துக்கொள்ளலாம்.
இது தொடர்பாக சமூக வளைதங்களில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், மற்றும் மாடித்தோட்டம் வைத்திருப்பவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் வீடியோக்களாக பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ மற்றும் மாடித்தோட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொண்டு பலரும் தங்களது வீடுகளில் இந்த மாடித்தோட்ட முறைகளில் காய்களிகளை பயிரிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மாடித்தோட்டம் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதை எப்படி உருவாக்க வேண்டும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரும் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம் .
Advertisment
Advertisements
அந்த வகையில் தற்போது இருவரும் தங்களது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காய் மற்றும் பாகற்காய் எடுத்துக்கொண்டு அதை எப்படி விளைவிக்க வேண்டும் என்று ம்றறவர்கள் தெரிந்துகொள்ளும்படி கூறியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பதிவில், முதலில் மல்லிகைப்பூ, கத்திரிக்காய் பாகற்காய் ஆகிய காய்கறிகளை பறித்துக்கொண்டிருக்கிறார். அனிதா குப்புசாமி. இடையில் பேசும் புஷ்பவனம் குப்புசாமி, பூச்செடிகளுக்கு பஞ்சகாவியத்தை வடிக்கட்டி ஸ்பிரே செய்தால் நன்றாக வளரும். அதேபோல் பகல் முழுவதும் நாதஸ்வரம் இசையை ப்ளே செய்து விடுகிறோம். இசை செடிகளுக்கு மிகவும் பிடிக்கும் அவை வளர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதன்பிறகு மண்புழு உரம் போடுகிறோம். பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்கு வேப்ப எண்ணெய் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வளவுதான் இதை செய்தாலே மாடித்தோட்டம் பிரமாதமாக வளரும். அதே மாதிரி பாகற்காய் இரண்டு செடிகள் தான் 4 நாட்களில் பாடல்கள் கேட்டு ஒன்னரை கிலோவுக்கு அதிகமாக காய்த்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil