துணிகளை அழுக்கு இல்லாமல் துவைப்பது மட்டும் இல்லாமல், அந்த துணிகளை வெளியில் உடுத்தி செல்லும்பொது பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அயன் செய்வது வழக்கமான ஒன்று. அதிலும் குறிப்பாக வெள்ளை சட்டையாக இருந்தால், அயன் செய்து உடுத்த பலரும் விரும்புவார்கள். இந்த மாதிரியான துணிகளை கஞ்சி போட்டு அயன் செய்வது அனைவருக்கும் விருப்பமான ஒரு முறை. கஞ்சி போடுவது துணிகளுக்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும்.
Advertisment
கஞ்சி போடுவது, துணிகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்க உதவும், துணிகள் அதிக நாள் உழைக்கவும் இது உதவும். துணிகளுக்கு கஞ்சி போடுவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒருமுறைதான் ஜவ்வரிசி வைத்து கஞ்சி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ஒரு கப் ஜவ்வரிசி மாவை எடுத்துக்கொண்டு அதில் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த கலவை கெட்டித்தன்மை வரும்வரை கிண்டிக்ககொண்டே இருக்க வேண்டும்.
அடி பிடித்துவிடாத அளவுக்கு கிண்டிக்கொண்டே இருந்து ஒரு கெட்டி பதத்திற்கு வந்தவுடன்அடுப்பை ஆப் செய்துவிட்டு, அந்த கஞ்சியை துணிகளுக்கு பயன்படுத்தலாம். கஞ்சி சூடாக இருக்கும்போது பயன்படுத்த கூடாது. கஞ்சி போடுவது துணிகளுக்கு ஒருவிதமான கடினத்தன்மையை கொடுப்பதால், அவை நேர்த்தியாகவும், மடிப்பு இல்லாமல் இருக்கவும் உதவுகிறது. கஞ்சி போடப்பட்ட துணிகள் சுருங்குவது கடினம். இதனால் அவை எப்போதும் புதியதாக இருப்பது போன்ற தோற்றம் இருக்கும்.
Advertisment
Advertisements
கஞ்சி போடப்பட்ட துணிகளை துவைப்பது மிகவும் எளிது. அழுக்கு கஞ்சியின் மேல் படிவதால், துணியிலிருந்து அழுக்கை அகற்றுவது சுலபமாகிறது. அதேபோல், ஒரு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு, அழுக்கு மற்றும் வியர்வை நேரடியாக துணியில் படியாமல் தடுக்கிறது. இதனால் துணிகள் நீண்ட காலத்திற்கு சுத்தமாக இருக்கும். அழுக்கு மற்றும் தேய்மானத்திலிருந்து பாதுகாப்பதால், கஞ்சி போடப்பட்ட துணிகள் நீண்ட காலம் உழைக்கின்றன. கஞ்சி போடப்பட்ட உடைகள் மிகவும் நேர்த்தியாகவும், தொழில்முறை தோற்றத்துடனும் இருக்கும்.