பூ பூக்காமல் இருக்கும் செடிகளுக்கு என்ன செய்தால் பூக்கும் என்பது குறித்து பலரும் யோசிப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவை வைத்தே, மல்லிகைப்பூ செடிகளை பூக்க வைக்க முடியும்.
பூ பூக்காமல் இருக்கும் செடிகளுக்கு என்ன செய்தால் பூக்கும் என்பது குறித்து பலரும் யோசிப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவை வைத்தே, மல்லிகைப்பூ செடிகளை பூக்க வைக்க முடியும்.
இட்லிக்கு அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்து, பின்னர் சில மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க வைக்கப்படுகிறது. இந்த நொதித்தல் செயல்முறை மாவுக்கு ஒரு புளிப்பு சுவையையும், மென்மையான அமைப்பையும் அளிக்கிறது. புளித்த இட்லி மாவை வைத்து இட்லி, தோசை, பணியாரம் போன்ற பல்வேறு உணவுகளை செய்யலாம். மாவு அதிகமாக புளித்துவிட்டால், அதில் இட்லி, தோசை என எது செய்தாலும், சுவையாக இருக்காது.
Advertisment
ஆனாலும் அதிகமாக புளித்த இட்லி மாவில், சிறிது அரிசி மாவு அல்லது ரவை சேர்த்து தோசை செய்யலாம். மேலும், புளித்த மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வெங்காய தோசையும் செய்யலாம். இப்படி புளித்த மாவில், செய்யக்கூடிய பல உணவுகள் இருந்தாலும், இந்த மாவை பயன்படுத்தி பூக்காத மல்லிகை செடிகளையும் நன்றாக பூ பூக்க வைக்க முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை.
பெண்கள் அனைவரும் விரும்பும் முக்கியமான சிலவற்றில் பூவுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் குறிப்பாக மல்லிகைப்பூ என்பது கணவன் மனைவி இடையே நெருக்கத்தை அதிகரிக்க செய்யும் ஒரு பூ என்று சொல்வார்கள். கிராமங்களில், பலரும் தங்கள் வீடுகளில், பூச்செடிகளை நட்டு வைத்து அதில் இருந்து கிடைக்கும் பூக்களை தங்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். அதே சமயம், சில செடிகள் நன்றாக பூ பூக்கும், சில செடிகள் பூக்காமல் இருக்கும்.
பூ பூக்காமல் இருக்கும் செடிகளுக்கு என்ன செய்தால் பூக்கும் என்பது குறித்து பலரும் யோசிப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவை வைத்தே, மல்லிகைப்பூ செடிகளை பூக்க வைக்க முடியும். வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவை ஒரு கைப்பிடி எடுத்து, 20 லிட்டர் தண்ணீரில் அனை சேர்த்து கலக்கவும். மாவு கட்டி கட்டியாக இல்லாத வகையில் நன்றாக கலக்கிவிட்டு, இந்த தண்ணீரை செடியின் வேர்களில் ஊற்ற வேண்டும்.
Advertisment
Advertisements
புளித்த இட்லி மாவில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியா மண்ணில் இருந்து சத்துக்களை ஊறிஞ்சி செடிகளுக்கு கொடுக்கும். இதன் மூலம் செடி நன்றாக வளர்ந்து, பூக்கள் அதிகமாக பூக்கும். நீங்களும் உங்கள் வீடுகளில் மல்லிகைப்பூ செடி வைத்திருந்தால் இதை ட்ரை பண்ணி பாருங்க.