/indian-express-tamil/media/media_files/GzbcWU6dZJcTQZzRxlJd.jpg)
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் (தமிழ்மாதம் பங்குனி) தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகபெருமானுக்கு பங்குனி உத்திர திருவிழா நடத்தப்படுவது வழக்கம். முருகனின் ஆறுபடை வீடு மட்டுமல்லாமல் பல பிரிசித்தி பெற்ற கோவில்கள் முதல் கிராமங்களில் உள்ள பிரபலமாகாத பல கோவில்களிலும் இந்த பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் 11-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. இந்த நாளில் தெய்வ வழிபாடு எப்படி இருக்க வேண்டும்? இந்த வழிபாட்டின்போது விரதம் இருப்பது எப்படி என்பது குறித்து, ஆத்ம கான மையம் யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு பல திருவிழாக்கள் நடப்பது வழக்கம்.
இதில் தமிழ் ஆண்டில் எடுத்துக்கொண்டால் பங்குனி உத்திர திருவிழா, உத்தர நட்சத்திரத்தில், நடைபெறும் இந்த திருவிழா தான் ஆண்டு இறுதியில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாக பார்க்கப்படுகிறது. பரமசிவன் பார்வதி, ராமன் சீதா, முருகன் தெய்வானையை திருமணம் செய்துகொண்ட நாள் பங்குனி உத்திர திருநாள். அதனால் பங்குனி உத்திரத்தை கல்யாண நாள் என்றே சொல்லலாம்.
முருகனின் ஆலயங்களில் கொடி ஏற்றி சீரோடும் சிறப்போடும் இந்த பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி பங்குனி உத்தரம் கொண்டாடப்படும் நிலையி்ல, உத்திரம் நட்சத்திரம் ஏப்ரல் 10-ந் தேதி பகல் 2.07 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல் 11-ந் தேதி மாலை 4.11 மணிக்கு முடிவடைகிறது. அதே சமயம் ஏப்ரல் 12-ந் தேதி தான் பவுர்ணமி வருகிறது.
பங்குனி உத்திரமான ஏப்ரல் 11-ந் தேதி காலை 9 மணி முதல் 10.20 வரை நாம் வழிபாடு செய்துகொள்ளலாம். மாலை 6 மணி தொடங்கி 8 மணிவரை வழிபாடு செய்யலாம். பங்குனி உத்திரத்திற்கு உத்திரம் நட்சத்திரம் முக்கியமானது என்பதால் தான், உத்திரம் நட்சத்திரம் வரும் நாளையே பங்குனி உத்திர திருநாளாக கொண்டாடப்பட உள்ளது என்று கூறியுள்ளார்,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.