உங்களுக்குப் பிடித்தமான சட்டையிலோ, விலை உயர்ந்த புடவையிலோ கரை படிந்துவிட்டால் ஏற்படும் மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதை நினைத்து வருத்தப்படுவதை விட, கறையின் வகையறிந்து சரியான முறையில் அதை நீக்கினால் போதும். கரையும் போய்விடும் உங்கள் மன உளைச்சலும் குறைந்துவிடும். கறை படிந்தவுடன் பதற்றப்படாமல் உடனடியாக செயல்படுவது மிக முக்கியம்.
Advertisment
கறை எவ்வளவு நேரம் துணியில் ஊறுகிறதோ, அவ்வளவு உறுதியாக அது பிடித்துக்கொள்ளும். சுத்தமான துணி அல்லது காகிதத்தால் கறை படிந்த இடத்தை மெதுவாகத் துடைத்து அழுக்கை அகற்ற முயற்சி செய்யலாம். கையை வைத்துத் தேய்ப்பதைத் தவிர்த்தால், அது கறையை மேலும் பரவச் செய்யும். மேலும், கறை படிந்த பகுதியின் பின்புறமிருந்து சுத்தம் செய்யவது தான் சரியாக வழியாக இருக்கும்.
துணிகளில் கரை படிவது தவிர்க்க முடியாததுதான். ஆனால், சரியான முயற்சி இருந்தால், கரைகள் இல்லாமல், உடைகள் எப்போதும் பளிச்சென்று இருக்கும். மற்ற கரைகளை விடவும் துணிகளில் ஏற்படும் மஞ்சள் கரைகள், அகற்றுவது மிகவும் எளிமையான ஒரு தீர்வு. இதற்கு சிறிதளவு பால் இருந்தாலே போதுமானது. துணிகளில் மஞ்சள் கறை இருக்கும் இடத்தை நனைத்து அதில், சிறிதளவு பால் ஊற்றி தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்க்கும்போது பாதி கரை போய்விடும்.
Advertisment
Advertisements
அதன்பிறகு இந்த துணியை நன்றாக தண்ணீரில் தேய்த்து எடுத்து, அடுத்து துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பை வைத்து தேய்த்தால் கறை நீங்கிவிடும் இந்த ஐடியாவை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்.