வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளில் முக்கியமானதாக இருக்கும் துணி துவைப்பது பெரிய கஷ்டமான வேலையும் கூட. இந்த வேலையை ஈஸியாக செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
நம் உடுத்தும் உடை சுத்தமாக இருப்பது மிகவும் அவசிம். உடையில் சுத்தம் இல்லாத காரணத்தினால் கூட பல நோய் தாக்கம் ஏற்படுவது வழக்கம். இதனால் உடைகள் அனைத்தையும் சுத்தமாக துவைப்பது அவசியமாகும். துவைப்பதற்கு சோப்பு, அல்லது பவுடர் பயன்படுத்தி துவைப்பது வழக்கம். சாதாரண துணிகளை இந்த முறையில் துவைத்து விடலாம்.
அதே சமயம், பட்டுப்புடவை போன்ற உடைகளை தண்ணீரில் நனைத்து துவைத்தால் அதன் தன்மையே போய்விடும். இதனால் அவற்றை தண்ணீரை பயன்படுத்தாமல் ட்ரை வாஷ் கொடுப்பது தான் நல்லது. இன்றைய காலக்கட்டத்தில், ட்ரை வாஷ் செய்வதற்கு அதிகமான பணம் செலவாகிறது. ஆனால் சில குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்தினால், நம் வீட்டிலேயே, புடவைகளை ட்ரை வாஷ் செய்துகொள்ளலாம்.
ஒரு பக்கெட்டில், அரை பக்கெட் தண்ணீர், அதில் ஒரு பாக்கெட் கண்டிஷ்னர், ஒரு பாக்கெட் ஷாம்பு சேர்த்து நன்றாக கலக்கவும். நுரை வரும் அளவுக்கு நன்றாக கலக்கிவிட்டு, அதில், ஒரு சிறிய கப்பில் கம்பர்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை ஒரு சுத்தமாக துணியில் நனைத்து, சேலையில் கரை உள்ள இடங்களில் வைத்து தேயத்தால், உடனடியாக கரை போய்விடும். இப்படி நம்மிடம் இருக்கும் அனைத்து சேலைக்கும் இதையே பயன்படுத்தலாம்.
வாஷ் செய்து முடித்தவுடன், அதனை உலர வைத்து அயன் செய்து எடுத்தால், துணி சுத்தமாகிவிடும். வெளியில் கொடுத்து அதிக பணம் செலவழிப்பதை விட, இந்த முறையில் வீட்டிலேயே ட்ரைவாஷ் செய்து, பணத்தை மிச்சப்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“