பி.பி-யை குறைக்கும்… உங்க கிச்சனில் இந்த எளிய பொருளை மிஸ் பண்ணாதீங்க..!

Tamil Lifestyle Update : பொதுவாக மளிகைக் கடைகளில் கிடைக்கும் பெருங்காயம் உணவிற்கு சுவை அளிப்பது மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் குறிப்பிடத்தக்க நன்மையை கொடுக்கிறது

Tamil Health Update : பெருங்காயம்  இல்லாமல் இந்திய உணவு முழுமையடையாது என்று சொல்லலாம்.  அசாஃபோடிடா என்றும் அழைக்கப்படும் பெருங்காயம், அது கறி அல்லது பருப்பு, ஜீரா, கரம் மசாலா மற்றும் ஹால்டி போன்ற மற்ற சுவையூட்டும் பொருட்களுடன், ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கும்போது உணவில் கூடுதல் சுவை கிடைக்கும்.  பெரும்பாலான இந்திய சமையலறைகளில் பொதுவாக காணப்படும் பெருங்காயம், மிகவும் மணம் கொண்டது மற்றும் அதிர சுவை தரக்கூடியது.

ஃபெருலா அஸ்ஸா-ஃபோடிடா செடியின் வேர்களில் இருந்து கிடைக்கும் பிசின் போன்ற கம் வடிவில் பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் திடப்படுத்தப்படுகிறது. அதன்பின்னது இதை ஒரு பொடி வடிவத்தில் அரைத்து பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக மளிகைக் கடைகளில் கிடைக்கும் பெருங்காயம் உணவிற்கு சுவை அளிப்பது மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் குறிப்பிடத்தக்க நன்மையை கொடுக்கிறது. மேலும் இது நாய்கள், பூனைகள் மற்றும் வனவிலங்குகளை விரட்டவும் பயன்படுகிறது.

இதில்  கார்மினேடிவ், வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மயக்க மருந்து மற்றும் டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது. பெருங்காயத்தில் இருந்து கிடைக்கும்  வேறு சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

அசாஃபோடிடா இயற்கையான இரத்த மெலிவு என்று அறியப்படுகிறது, எனவே இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. உடலில் இரத்தம் உறைவதைத் தடுக்கவும் உதவுகிறது.

வயதான தோற்றத்தை மாற்றும் பண்புகள்

ஹிங் வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்களை அகற்ற உதவுகிறது. கான்டிமென்ட் சருமத்தை வெண்மையாக்கும் பொருளாக பயன்படுத்தலாம், இது கண்களுக்குக் கீழே உள்ள கருப்பு புள்ளிகளை அகற்ற உதவுகிறது. முகத்தில் இதனை பயன்படுத்தும்போது சருமத்தின் மந்தத்திற்கு காரணமான டைரோசின் உற்பத்தி உடலில் தடைபடும் என்று கூறப்படுகிறது.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு

உணவில் பெருங்காயம் சேர்க்கப்பட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். உடலில் புரோஜெஸ்ட்டிரோன் சுரப்பு இயல்பாக்கப்படுகிறது, இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

வீக்கம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது

பலரும் தங்களது மூன்று வேளை உணவையும் மோர் கொண்டு முடிக்க விரும்புகிறார்கள்-தயிர், அஸ்போடிடா மற்றும் கல் உப்பு. புத்துணர்ச்சியூட்டும் பானம் செரிமானத்தை துரிதப்படுத்தவும் வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது, ஹிங்கின் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

ஆஸ்துமா

அசாஃபோடிடாவின் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவுகள் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வறட்டு இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றன. இதற்காக ஒரு சிட்டிகை பெருங்காயம் இஞ்சி அல்லது உலர்ந்த இஞ்சி பொடியை சிறிது தேனுடன் கலந்து குடித்தால், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil lifestyle update health benefits of asafoetida

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com