இன்றைய காலக்கட்டத்தில், வீ்ட்டில், சிமென்ட் வைத்து பூசுவதை விட, டைல்ஸ், மார்பில்ஸ் என கற்கலை பதிக்கும் நடைமுறை உள்ளது. வீடு முழுவதும் இல்லை என்றாலும் கழிவறையில், டைல்ஸ் மட்டுமாவது டைல்ஸ் ஒட்டி வருகிறார்கள். இந்த டைல்ஸ் ஒட்டுவதை விடவும் இதை பராமரிப்பது என்பது பெரிய விஷயம். குறிப்பாக கழிவறை அதிக தண்ணீர் பயன்படுத்தும் இடம் என்பதால், அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இதை சரியாக பராமரிக்க தவறினால், அதில் உப்பு கரை படித்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இன்றைய காலக்கட்டததில், கழிவறையை சுத்தம் செய்ய பல லிக்யூடு வந்திருந்தாலும், கழிவறை டைல்ஸ் உப்புக்கரையை சுத்தம் செய்ய, இந்த லிக்யூடுகளை பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறித்தான். ஆனால் வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்களை மட்டும் வைத்து இந்த கழிவறை டைல்ஸில் படித்திருக்கும் உப்புக்கரையை நீக்கலாம்.
எப்படி தெரியுமா? ஒரு பவுலில், 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து அதில், கொஞ்சம் (4 ஸ்பூன்)சபீனா பவுடர், துணி துவைக்கும் சோப்பை துண்டு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் துணி துவைக்க பயன்படுத்தப்படும் டிஜர்ஜெணட் பவுடர் 4 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். அதன்பிறகு இந்த கலவையில், ரசம் மற்றும் சாம்பார் வைக்க பயன்படுத்திய புளியின் சக்கையை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை இதில் சேர்த்துக்கொள்ளவும்.
இந்த கலவையை நன்றாக கலந்து, கழிவறையில், உப்புக்கரை இருக்கும் இடத்தில் தெளித்து நன்றாக ப்ரஷ் வைத்து தேய்த்தால், கழிவறை டைல்ஸ் மிகவும் சுத்தமாகும். டைரை பண்ணி பாருங்களேன்.