வீ்ட்டில் சமைக்கும்போது செய்வதை விட, பாத்திரங்களை கழுவுவது தான் சிரமமமாக இருக்கும். பொதுவாக வீட்டில் சமையல் வேலை செய்வதை விட பாத்திரங்களை கழுவுவது தான் பெரிய வேலையாக இருக்கும். பெண்கள் சமைப்பதை விட, இதை செய்வது தான் பெரும் தலைவலியாக நினைப்பார்கள். மற்ற நாட்களில் கூட, சமாளித்து பாத்திரத்தை கழுவிவிட்டாலும், விழாக்காலங்கள், பண்டிகை நாட்கள், என வரும்போது. சமையலும் அதிகமாககும், அதேபோல் கழுவ வேண்டிய பாத்திரங்களும் அதிகமாக இருக்கும்.
அதேபோல், குளிர் காலத்தில், இந்த வேலைகளை செய்வது மிகவும் கடினமான ஒன்று. இந்த காலக்கட்டத்தில், குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், தண்ணீரில் கை வைத்தாலே ஐஸ் வைத்தது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் பல பெண்கள், எப்படி பாத்திரத்தை கழுவுவது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். இப்படி, பாத்திரம் கழுவ கஷ்டப்படும் பெண்களுக்கு இப்படி ஒரு டிப்ஸ் இருக்கிறது என்று தெரிந்தால், பாத்திரம் கழுவுவது கஷ்டமே இல்லை.
குறிப்பாக அடுப்பு அல்லது ஸ்டவ்வில் சமையல் செய்யும்போது கரி படிந்த பாத்திரத்தை கழுவுவது பலருக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்த மாதிரியான பாத்திரங்களை உடனடியாக கழுவுவதற்கும்’, அதே சமயம் எளிமையான முறையில் கழுவுதற்கும், நம் வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். அந்த பொருள் உப்பு மற்றும் எலுமிச்சை. பொதுவாக உணவில் இருக்கும் சுவையை நமக்கு உணர்த்துவது உப்பு தான். ஆனால் உப்பு பல வழிகளில் நமக்கு நன்மை செய்கிறது.
அதேபோல் எலுமிச்சையும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பொருளாக இருக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து கரி படிந்த பாத்திரத்தை பளபளப்பாக மாற்ற முடியும். கரி படிந்த பாத்திரத்தை எடுத்து அதில் உப்பை சேர்த்து, எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அரை பழத்தில் சாறு எடுத்து உப்புடன் சேர்த்து கரி படிந்த இடத்தில் தேய்த்தால் எளிதாக கரை நீங்கிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.