Tamil Recipe Update Rasam : பாரம்பரிய உணவுகளில் முக்கியத்துவம் பெற்றது ரசம். விருந்து நிகழ்ச்சிகளில் ரசம் இல்லாமல் முழுமை பெறாது என்று கூறுவது உண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத ஒரு சிறப்பை பெற்றுள்ள ரசம், ஏராளமான மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இதில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்கள் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த ரசம் செய்வதற்கு மிகவும் எளிமையானது. தற்போது ரசத்திற்கு என்று தனியாக பொடி கிடைக்கிறது. பெரும்பாலும் மக்கள் இந்த பொடியை பயன்படுத்தியே ரசத்தை தயார் செய்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் மட்டுமே பழங்கால முறைப்படி ரசப்பொடி பயன்படுத்தாமல் சுவையாக ரசம் செய்கின்றனர்.
அந்த வகையில் தற்போது ரசப்பொடி பயன்படுத்தாமல் சுவையாக ரசம் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பூண்டு – 12 பல்
மிளகு – 3 டீஸ்பூன்
சீரகம் – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கருவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸபூன்
வெந்தயம் – ஒரு சிட்டிகை
தக்காளி – 3
புளி – ஒரு எலுமிச்சை அளவு
வேவைத்த பருப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் பூண்டு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை பெருங்காயம், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்க்கவும். அதன்பின் அரைத்துவைத்த மசாலாவை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்.
அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றான கிளறி விடவும். அடுத்து புளி கரைசலை அதனுடன் சேர்த்து கிளறி அதில் வேகவைத்த பருப்பு ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.
அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடிவைக்கவும். சிறிது நேரத்தில் ரசம் நன்றாக கொதித்தும் மல்லி இலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து இறக்கி பறிமாறலாம். சுவையாக ரசம் தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil