இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பலவகையான உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. இதில் ஒவ்வொரு மாநிலங்களின் பாரம்பரிய உணவுகளுக்கு எப்போதும் தனி சுவை இருக்கும். அந்த வகையில் கேரளாவில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் அங்கு மட்டுமல்லாது மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் தனி சுவையை தரும். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேரளா ஸ்பெஷல் உணவான இலை அடை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தேங்காய் பூர்ணம் செய்ய தேவையான பொருட்கள் :
வெல்லம் - 200 கிராம்
நெய் – 3 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் 200 கிராம் வெல்லத்தை சேர்க்கவும். தொடர்ந்து அடுப்பில் வைத்து தண்ணீருடன் சேர்ந்து வெல்லம் கரையும் வரை கலக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் தனியாக எடுத்து வைத்துவிடவும.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றவும். அதில் ஒருகப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுக்கவும். 5 நிமிடங்களுக்கு தேங்காய் பொன்நிறமான மாறியவுடன், தனியாக எடுத்து வைத்துள்ள வெல்லம் கலந்த நீரை அதில் ஊற்றவும். இதில் வேல்ல நீர் வற்றும் வரை தேங்காயை கிளறி விடவும்.
தண்ணீர் முக்கால் பாகம் வெளியேறியவுடன் அதில் ஏலக்காய் பொடி சேர்ந்து நன்கு கலக்கவும். அதன்பிறகு ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறவும். அதன்பிறகு தேங்காய் பூர்ணம் கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும்.
இலை அடை செய்ய தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - ஒரு கப்
நெய் – ஒரு தேக்கரண்டி
வாழை இலை
உப்பு
தண்ணீர்
தேங்காய் பூர்ணம்
செய்முறை :
ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு பொட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பவுளில் ஒரு கப் அரிசிமாவுடன் ஒரு தேக்கரண்டி நெய், கொதித்த தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கிண்டவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு போன்று கிண்டவும்.
அதன்பிறகு வாழை இலையை எடுத்து சிறிதளவு மாவை உருட்டி தட்டி வாழை இலையில் வைத்து அதன்மீது தேங்காய் பூர்ணத்தை தட்டிய அரிசி மாவின் நடுவில் வைத்து இலையை மடித்து பக்கவாட்டில் அழுத்திவிடவும். அதன்பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் மாவு வைத்த வாழை இலைகளை அதில் வைத்து வேக வைக்கவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து பறிமாறலாம். ஓணம் ஸ்பெஷல் இலை அடை ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil