Tamil Health Tips Update : பாரம்பரியமிக்க இயற்கை உணவுப்பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதிலும் நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பல பொருட்களில் பலவகையான நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாக உள்ளது. சமையலறை பொருட்களில் பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் நீரிழிவு நோய் பிரச்சணைக்கும் இயற்கையில் கிடைக்கும் சமையல் பொருட்கள் தீர்வு தரும்.
நீரிழியு நோய் தாக்கம் இல்லாமல் இருக்க உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக நோயாளிகள் மருந்துகளையும், உணவு முறையையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். உடலில் கணையம் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போனதன் விளைவாக நீரிழிவு ஏற்படுகிறது. இந்த நீலையை கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் சிறந்த இயற்கை முறை உள்ளது.
கொத்தமல்லி அல்லது தனியா விதைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பயனை தருவதாக கூறப்படுகிறது. பருப்பு, கறி மற்றும் பிற சுவையான உணவுகளுக்கு கூடுதல் சுவையை சேர்க்க பயன்படும் கொத்தமல்லி விதைகளில், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி கே, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இத்தகைய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயாளிகளில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் மற்றும் இன்சுலின் செயல்பாட்டைப் பராமரிக்கும் என்று கூறப்படுகிறது, அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்ட்ரெப்டோசோடோசின் தூண்டப்பட்ட நீரிழிவு எலிகளில் கணைய பீட்டா செல்களில் இருந்து இன்சுலின் வெளியீட்டைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி விதைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கொத்தமல்லி விதைகள் மற்றும் இலைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளன. 2013-ம் ஆண்டு தி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, கொத்தமல்லி விதைகளிலிருந்து எடுக்கப்படும் சாறுகளில் சில சேர்மங்கள் இருப்பதைக் கண்டறிந்தது, இரத்தத்தில் வெளியேற்றப்படும் போது உங்கள் இரத்த குளுக்கோஸை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஹைபர்கிளைசெமிக் எதிர்ப்பு, இன்சுலின் வெளியேற்றம் மற்றும் இன்சுலின் போன்ற இயக்கம் ஏற்படுகிறது. விதைகளில் எத்தனால் இருப்பது சீரம் குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொத்தமல்லி எவ்வாறு உட்கொள்வது?
கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, அவற்றில் ஒரு சிலவற்றை இரவில் தண்ணீரில் ஊறவைத்து. காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை முதலில் குடிக்கவும். இதன் மூலம் நாள் முழுவதும் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) அளவைக் குறைத்து, இரத்தத்தில் எச்.டி.எல் (நல்ல கொழுப்பு) அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. உங்கள் உணவுகளில் கொத்தமல்லி விதைகளையும் சேர்த்து, நன்மையை பெறலாம். இருப்பினும், நீரிழிவு நோய்க்கு மருந்துகள் உட்கொண்டு வரும்போது கொத்தமல்லி விதை நீருக்கு மாறுவதென்றால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil