Advertisment

விஐபி வீட்டு மாடித்தோட்டம்: 15 கிலோ தக்காளி விளைந்தால் என்ன செய்வது?

Tamil Terrace Garden : மாடி தோட்டம் குறித்து பிரபல பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
விஐபி வீட்டு மாடித்தோட்டம்: 15 கிலோ தக்காளி விளைந்தால் என்ன செய்வது?

Terrace Garden Of Singer Pushpavanam Kuppusamy Home : வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து, அந்த தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பிரபல பின்னணி பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Advertisment

இசையுலகில் நாட்டுப்புற பாடல்களுக்கு பிரபலமானவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. தம்பதியான இருவரும் பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் இவர்கள் பாடும் பாட்டி பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியிகளில் பங்கேற்று பாடியுள்ள புஷ்பவனம் குப்புசாமி, தமிழக அரசின் உயரிய விருதான கலைமாணி விருது பெற்றுள்ளார்.

மேலும் சேரனின் நடிப்பில் வெளியான சொல்ல மறந்த கதை திரைப்படத்தில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், தற்போது தனது மனைவியுடன் இணைந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் பாடல் போலவே இவரின் விவசாய பணிகளும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இவருடைய மனைவி அனிதா புஷ்பவனம் குப்புசாமி விஹா என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு தேவையான சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறார். அதே சேனலில் அதே சேனலில் சமையல் குறிப்புகளுக்கு முன் காய்கறிகளை மாடி தொட்டத்தில் விளைவிப்பது என்படி என்பது குறித்து மக்களிடம் பகிர்ந்து வருகிறார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், காய்கறிகள் உட்ப அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் நிலையில், கிராமத்து மக்கள் தங்களது வீடுகளில் தங்களுக்கு தேவையான காய்கறிகளை விளைவித்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நகரத்து மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பலர் ஏங்குவது உண்டு. அவர்களுக்கு எல்லாம் ஒரு தீர்வாகவும் முன்னுதாரணமாகவும் புஷ்பவனம் குப்புசாமி அவரது மனைவி அனிதா குப்புசாமி வீட்டில் மாடி தொட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மாடி தோட்டம் அமைப்பது குறித்து வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் இருந்தாலும், தற்போதைய நிலவரத்தின் இவர்களின் தகவலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. செடிகளில் ரசாயன உரம் கலக்காமல் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் முற்றிலும் ஆர்கானிக் முறையில் காய்கறிகள் விளைவிப்பது எப்படி என்றும்,  அப்படி விளைந்த காய்கறிகளை வைத்து எப்படி எல்லாம் சமையலில் வித்தியாசம் காட்டலாம் என்றும் புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர் மக்களிடம் கூறி வருகின்றனர். தற்போது வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Terrace Garden Tamil Lifestyle Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment