முட்டை, வெல்லம் கொண்டு வீடு கட்ட முடியுமா? – சாதித்து காட்டிய தமிழர்

வெல்லம் மற்றும் முட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் வழக்கத்திற்கு மாறான முறையில் வீடுகளையும் கட்ட முடியும் என்று நினைத்து பார்த்துள்ளீர்களா? தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெல்லகோயிலில் வசித்து வரும்  ஜவஹர் சி, தனது 3,200 சதுர அடி வீட்டை வெல்லம் மற்றும் முட்டையின் வெள்ளை பகுதியை கொண்டு கட்டி…

By: March 6, 2020, 10:44:42 PM

வெல்லம் மற்றும் முட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் வழக்கத்திற்கு மாறான முறையில் வீடுகளையும் கட்ட முடியும் என்று நினைத்து பார்த்துள்ளீர்களா?

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெல்லகோயிலில் வசித்து வரும்  ஜவஹர் சி, தனது 3,200 சதுர அடி வீட்டை வெல்லம் மற்றும் முட்டையின் வெள்ளை பகுதியை கொண்டு கட்டி வருகிறார்.

மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் : போராட்டத்திற்கான விதை விதைக்கப்பட்ட நாள்…

இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் மூதாதையர்கள் கட்டி எழுப்பிய வீடுகள்  நன்கு காற்றோட்டமாகவும், துணிவுமிக்கதாகவும், அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் இருந்தன. நான் அவர்களால் பெரிதாக ஈர்க்கப்பட்டேன். இதேபோன்ற ஒன்றை செய்ய விரும்பினேன். தவிர, கட்டுமான நடவடிக்கைகள் மிகவும் மாசுபடுத்தும். நாம் எப்படியும் இயற்கை வளங்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம், எனவே பூமிக்கு ஏன் மேலும் பாரத்தை கொடுக்க வேண்டும்?” என்கிறார்.

ஜவஹர் அதை உறுதியான ஒன்றாக மாற்றக்கூடிய ஒரே நபரைப் பற்றி பேசுகிறார் – அவரது மருமகன் அரவிந்த் மனோகரன்.

மனோகரன், 27 வயதான பொறியியலாளர், 2018 இல் நிறுவப்பட்ட ‘பிஷாய் அசாகு’ என்ற நிலையான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில், பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

மனோகரன் மற்றும் ஜவஹர் இருவரும் ஆரம்பத்தில் பொருட்களைப் பற்றி சிந்திக்கவில்லை, மேலும் உள்ளூரில் உள்ளவர்களுடனும், அப்பகுதியிலுள்ள வயதானவர்களிடமும் இருந்து தகவல்களை பெற அணுகினர்.

ஆச்சரியப்படத்தக்க வகையில், அவர்கள் நேர்காணல் செய்த பலருக்கு மண் மற்றும் வெல்லம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வீடு கட்டப்பட்டது தெரியவந்தது.

வெல்லம் சிறந்த பிணைப்பு காரணியாக செயல்படுகிறது. அதே நேரத்தில் பிளாஸ்டரில் முட்டை வெள்ளை பயன்படுத்துவது சுவர்களுக்கு மெருகூட்டப்பட்ட தோற்றத்தை அளிக்கிறது.

கொரோனா வைரஸ் குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு பதில்கள் இங்கே!

இந்த வீட்டின் கட்டுமானம் 2019 பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கியது, இது இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவர்கள் பாரம்பரிய செங்கற்களுடன் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சிமெண்டிற்கு பதிலாக, அவர்கள் சுண்ணாம்பு மோர்ட்டர், மணல், வெல்லம், நொறுக்கப்பட்ட கடுக்காய் (மஞ்சள் மைரோபாலன்) மற்றும் தண்ணீர் கலவையை பயன்படுத்தினர்.

செங்கற்களில் பிளாஸ்டரிங் செய்வது ஃபைவ் லேயர்களில் செய்யப்படுகிறது, இது உள்ளே அதிக ஆக்ஸிஜனைக் கொண்ட கட்டிடத்தின் சுவாசத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.

வீட்டின் கூரைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட மரம் பயன்படுத்துகின்றன, அவை அருகிலுள்ள காரைக்குடி பழைய மர சந்தையில் இருந்து பெறப்படுகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu engineer helps build home with eggs jaggery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X