New Update
/
தற்செயலாக வலையில் சிக்கிய பத்து ஆலிவ் ரிட்லி ஆமைகளை தமிழக மீனவர்கள் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு, தன் ட்வீட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, உயிரினங்களை மீண்டும் தண்ணீரில் விடுவிக்க மீனவர்கள் எவ்வாறு இணைந்து செயல்பட்டனர் என்பதை விளக்கினார். மேலும் இந்த மீட்புப் பணியில் ’கடல் ஓசை’ சமூக வானொலியின் தன்னார்வலர் ஆற்றிய பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.
தமிழகத்தின் தனுஷ்கோடியில் மீனவர்களால் 10 ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீட்கப்பட்டது. 'கடல் ஓசை' சமூக வானொலியின் உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வலர், ஆமைகளை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது மற்றும் விடுவிப்பது என்று வழிகாட்டுகிறார். தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியின் கீழ் 35 உள்ளூர் கிராமங்களில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம், என்று ஐஏஎஸ் அதிகாரி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ஆலிவ் ரிட்லி ஆமைகளை மீட்கும் வீடியோவை பாருங்கள்:
மீன்பிடி வலையில் ஆமைகள் சிக்கியதை வீடியோ காட்டுகிறது. ஆமைகள் வலையிலிருந்து வெளியேறி கடலுக்குச் செல்ல உதவுவதற்கு மீனவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.
Another rescue of Ten Olive Ridley turtles at Dhanushkodi in Tamil Nadu by fishermen. A volunteer from the local community from 'Kadal Osai' the Community Radio is guiding how to safely handle and release turtles. We are planning to expand the training and capacity building… pic.twitter.com/4ikIPFtCBl
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 3, 2024
இந்த வீடியோவுக்கு பதிலளித்த ஒரு நெட்டிசன், “எத்தனையோ அரிய வகை விலங்கினங்களை நாம் இழந்துவிட்ட நிலையில், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்றுவது மனிதர்களின் கடமை. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டுப் பணியானது ஆலிவ் ரிட்லீஸைக் காப்பாற்றுவதற்கான சரியான திசையில் ஒரு முன்முயற்சியாகும்,” என்று கமெண்டில் பதிவிட்டுள்ளார்.
"உங்கள் ட்வீட்டில் 'கடல் ஓசை' சமூக வானொலியின் பங்கை முன்னிலைப்படுத்தியதற்கு மிக்க நன்றி" என்று மற்றொருவர் கூறியுள்ளார். "இந்த ஆமைகளை மீட்டதற்காக இந்த தன்னார்வலர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று இன்னொருவர் கருத்து தெரிவித்தார்.
கடல் ஓசை
கடல் ஓசை என்பது மீனவர்களுக்கான இந்தியாவின் முதல் ரேடியோ சேனல் ஆகும். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவரால் தொடங்கப்பட்ட இந்த சமூக வானொலி நிலையம் கடல் பாதுகாப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.