200 ஆண்டுகள் பழமையான பலா மரம்: தமிழகத்தில் எங்கு இருக்கிறது தெரியுமா?
Tamil Nadu News: பல ஆண்டுகளாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதைப் பார்க்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து வருவதால், இந்த மரம் புகழ் பெற்றது.
Tamil Nadu News: தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பலாப்பழ உற்பத்திக்கு பெயர் பெற்றது. மதிப்பீட்டின்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நான்கு பலாப்பழங்களில் ஒன்று கடலூரில் விளைகிறது என்று கூறப்படுகிறது.
Advertisment
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 'மாளிகம்பட்டு ஆயிரம்கச்சி' என்கிற புகழ்பெற்ற பலா மரம் 200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இந்த பழமையான பலாமரம், கடலூர் மாளிகம்பட்டு குக்கிராமத்தில் விவசாயி எஸ்.ராமசாமியின் தோட்டத்தில் உள்ளது. இந்த வார தொடக்கத்தில், சுயாதீன பத்திரிகையாளர் அபர்ணா கார்த்திகேயன் (@AparnaKarthi) 200 ஆண்டுகள் பழமையான மரத்தின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அத்துடன், அவர் எழுதிய கட்டுரையும் இணைத்துள்ளார். அதில், 'ஆயிரம்கச்சி' மிகவும் அகலமானது, அதைச் சுற்றி நடக்க சுமார் 25 வினாடிகள் ஆகும் என்று எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதைப் பார்க்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து வருவதால், இந்த மரம் புகழ் பெற்றது.
பழம்பெரும் மரத்தைப் பற்றிப் பேசிய ராமசாமி, “இந்த மரம் ஐந்து தலைமுறைக்கு முன் என் முன்னோர் நட்டது. 1,000 பழம்தரும் ‘ஆயிரங்கச்சி’ என்கிறோம். இப்போது, உண்மையில், இது ஒரு வருடத்தில் 200 முதல் 300 பழங்களைத் தருகிறது, மேலும் அவை 8 முதல் 10 நாட்களில் பழுக்க வைக்கும். காய்கள் சுவையாக இருக்கும், நிறம் அழகாக இருக்கும், பழுக்காதவற்றை பிரியாணியாகவும் சமைக்கலாம்", என்று கூறினார்.
இந்த வீடியோ இதுவரை 9,000கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil