Advertisment

கோவாவை காட்டிலும் தமிழக கோவில்கள் தான் 'தி பெஸ்ட்’... சுற்றுலாவாசிகளின் கருத்து!

இந்தியாவுக்கு பெரும்பான்மையான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வங்கதேசத்தில் இருந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோவாவை காட்டிலும் தமிழக கோவில்கள் தான் 'தி பெஸ்ட்’... சுற்றுலாவாசிகளின் கருத்து!

கோவாவின் கவர்ச்சிமிகுந்த இரவு வாழ்க்கை மற்றும் அமைதியான கடற்கரைகளை விட, ஆறு மடங்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் கோவில்களுக்கு வருகை புரிந்துள்ளனர்.

Advertisment

'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

கவர்ச்சிமிகுந்த கடற்கரைகள் மற்றும் இரவு வாழ்க்கையை விட, இந்தியாவிலுள்ள கோவில்கள், அரண்மனைகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் அமைதிக்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

2018ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோவா விற்கு சென்றுள்ள நிலையில் சுமார் 60 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரவே விரும்பியுள்ளனர் என்பதே இதற்கு மேலும் சான்றாகிறது. ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்றது தமிழ்நாடு தான் என்ற புள்ளி விபரத்தை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பிரஹலாத் சிங் படேல் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடுத்தப்படியாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்ற மாநிலங்கள் மகாராஷ்டிரா, உத்தர் பிரதேஷ், டில்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் என கூறியுள்ளார்.

அதேபோல் ஒரு வருடத்தில் குறைவான எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்ற மாநிலம் மிசோரம் மாநிலம். கடந்த 2018ஆம் ஆண்டு வெறும் 967 வெளிநாட்டு சுற்றுல பயணிகள் தான் இந்த மாநிலத்துக்கு வருகை புரிந்துள்ளனர். மிசோரம் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக லட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்படாத மாநிலங்கள்.

இந்தியாவுக்கு பெரும்பான்மையான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வங்கதேசத்திலிருந்தும் அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா விலிருந்தும் வந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெளிநாட்டு பணத்தை அதிகரிப்பதில் பெறும் உதவியாக உள்ளதோடு அரசாங்கத்தின் வருவாயிலும் குறிப்பிடதக்க பங்களிப்பை அளிக்கின்றனர். இதனால்தான் அரசும் வழக்கமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மருத்துவ நோக்கத்திற்க்காகவும் இந்தியாவுக்கு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த 6 சதவிகித வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மருத்துவ நோக்கத்திற்காக வந்துள்ளனர். மருத்துவ சுற்றுலா செயல்பாடுகள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் தான் இயக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Goa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment