ஜனவரி 14ம் தேதி வரை தமிழகத்தில் கடலூர் முதல் கன்னியாகுமரி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுவாக ஜனவரி மாதம் மழை பொழிவு என்பது மிகவும் அரிதாகத்தான் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரமே தமிழகத்தில் பரவலான மழை பொழிவு ஏற்பட்டது. மேலடுக்கு காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் மழை பொழிவு தொடருமா என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
இந்த நிலையில், மெதுவாக நகர்ந்துவரும் மேலடுக்கு காற்றழுத்தம் காரணமாக ஜனவரி 10 முதல் ஜனவரி 14 வரை தமிழகத்தில் கடலூர் முதல் கன்னியாகுமரி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தை நிவர் புயல் தாக்குதலின்போது, வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நிவர் புயல் கரையைக் கடக்கும் பகுதியை துல்லியமாக கணித்துக் கூறி மக்களின் கவனத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 14ம் தேதி வரை கடலூர் முதல் கன்னியாகுமரி வரை 4 நாட்களுக்கு கனமழை வெளுக்க வாய்ப்புள்ளது என்பதால் தமிழக மக்கள் பொங்கலுக்கு மழை எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"