scorecardresearch

Tamil New Year 2020: உலகத் தமிழர்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு; வாழ்த்து சொல்ல அழகிய புகைப்படங்கள்

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

Tamil New Year 2020, Tamil New Year Wishes, Tamil Puthandu Vazthukal 2020 In Tamil
Tamil New Year 2020, Tamil New Year Wishes, Tamil Puthandu Vazthukal 2020 In Tamil

Tamil New Year 2020 Wishes, Images, Status: இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இந்த  தமிழ் புத்தாண்டு நாளில் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் வாழ்த்து புகைப்படங்கள் அனுப்ப இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.

உலகத் தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்று சித்திரைத் திருநாள் தமிழ் புத்தாண்டு நாளாகும். சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு தினம் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் கூறும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு நாளில் தமிழ் மக்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து கடவுளர்களையும் முன்னோர்களையும் வணங்கி கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் அனைவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அன்பானவர்களுக்கும் வாழ்த்து கூறுவது மரபு. உலகம் செல்பேசிக்குள் சுருங்கிவிட்ட இந்த காலத்தில் அனைவரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை வாட்ஸ் அப், சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ், எஸ்எம்ஸ், போஸ்டர், வால் பேப்பர் மூலம் பகிர்ந்துகொள்கின்றனர்.

வாசகர்களாகிய நீங்களும் உங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுக்கு வித்தியாசமாக அழகான புகைப்படத்துடன் வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்களா? உங்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்களையும் மனதையும் கவரும்படி வண்ணமயமாக தமிழ் புத்தாண்டு புகைப்படங்களையும் வாழ்த்து வாசகங்களையும் வடிவமைத்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அழகான நம்பிக்கையான வாசகங்கள் அடங்கிய புகைப்படங்களை அனுப்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி அசத்துங்கள். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil new year 2020 tamil new year wishes tamil puthandu vazthukal 2020

Best of Express