Tamil New Year 2022: உங்களுக்கான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், படங்கள், ஸ்டேட்டஸ் இதோ!
Happy Tamil New Year 2022, Tamil New Year wishes, Puthandu 2022 wishes, Thamil Puththaandu wishes, தமிழ் புத்தாண்டு: தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இப்போது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. புத்தாண்டு அன்று, மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, வாசல் தெளித்து, வண்ண கோலமிட்டு, விளக்கேற்றி, புத்தாடை அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளில் பங்கேற்று, அன்றைய நாளைத் தொடங்குவார்கள்.
வீட்டிற்குள் நேர்மறையான எண்ணங்களை வரவேற்கும் வகையில், நுழைவாயில்களில், மாவிலை தோரணம், வண்ண அரிசி மாவைப் பயன்படுத்தி ‘கோலம்’ போடுவார்கள்.
இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில வாழ்த்துக்கள் இங்கே!
Advertisment
Advertisement
* இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் கொண்டு வரட்டும்.
* இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
* உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.
* புத்தாண்டு திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும், வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் முடித்து ஒளியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “