scorecardresearch

முக்கனிகள் படைத்து வழிபாடு; மாங்காய் பச்சடி சாதம்… தமிழ் புத்தாண்டு கொண்டாட தயாரா?

Puthandu Tamil New Year 2023 : ஏப்ரல் 14 நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு,  இலக்கியத்திற்கும், இசைக்கும், கிராமிய கலைகளுக்கும்  பெயர்போனது. மேலும் செம்மொழி என்ற தனிச் சிறப்பு கொண்டது.

Tamil New Year
Tamil New Year Puthandu 2023 Celebrate

Tamil New year 2023: ஏப்ரல் 14 நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு,  இலக்கியத்திற்கும், இசைக்கும், கிராமிய கலைகளுக்கும்  பெயர்போனது. மேலும் செம்மொழி என்ற தனிச் சிறப்பு கொண்டது. இந்நிலையில் இவை அனைத்தும் போற்றும் வகையில் நாளை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நமது மாநிலத்தைபோலத்தான் மற்ற மாநிலங்களிலும், குறிப்பாக அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்று அந்த மாநிலத்தின் புத்தாண்டு கொண்டாப்படுகிறது.

இந்நிலையில் இந்த நல்ல நாளில், புத்தாடைகளை உடுத்திக்கொண்டு, கோவிலுக்கு செல்வார்கள். இதை ‘ சித்திரை விஷு’ என்று தமிழகத்தில் சில பகுதிகளில் அழைப்பார்கள்.

கோவிலில் நாம் வணங்கும் பொது, மாம்பழம், பலாப்பலம்,  வாழைப்பழத்தை இறைவனுக்கு படைப்பார்கள். தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள், நகைகள், பூக்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை இறைவனுக்கு வழங்குவார்கள். வீட்ற்கு முன்பாக அரிசிமாவில் கோலம்போடுவார்கள்.

மேலும் வீடு முழுக்க சாம்ராணி புகை போடப்படும். மேலும் கடவுளுக்கு பொங்கல் படைப்பார்கள். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பங்களை அழைத்து விருந்து வைப்பார்கள்.

இந்நிலையில் இந்த நாளி ஒரு ஸ்பெஷல் ரெசிபி செய்யப்படும் .அதுதான் மாங்காய் பச்சடி.

மாங்காய் பச்சடி செய்முறை: பச்சை மாங்காய், வெல்லம், சிவப்பு மிளகாய், வேப்பிலை, கடுகு போஸ்ட் வைத்து செய்யும் ஒரு பச்சடி இது.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil new year 2023 importance celebration puja rituals