குரோதி வருடப் பிறப்பு வழிபாடு, நேரம் என்ன? அனிதா குப்புசாமி வீடியோ
குரோதி வருடப் பிறப்பு வழிபாடு, நேரம், தேதி, கனி காணுதல், மருத்து நீராடல் குறித்து பிரபல பாடகி அனிதா குப்புசாமி தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார். இங்கே பாருங்க
ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. சித்திரை (சைத்ர) மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
Advertisment
பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினது கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.
இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் சோபகிருது ஆண்டு, வரும் ஏப்ரல் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. குரோதி வருடம் வரும் 13.4.24 (சோபகிருது வருடம் பங்குனி மாதம் 31 - ம் நாள்) இரவு 8.10 மணிக்கு துலா லக்கினத்தில் சனி ஓரையில் பிறக்கிறது. கும்ப ராசியில் சனிபகவானும் செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.
இந்த ஆண்டு கூடுதல் விசேஷமாக சூரியனுக்குரிய நாளான ஞாயிற்றுக் கிழமையில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
குரோதி வருடப் பிறப்பு வழிபாடு, நேரம், தேதி, கனி காணுதல், மருத்து நீராடல் குறித்து பிரபல பாடகி அனிதா குப்புசாமி தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார். இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“