"விசுவாவசு" தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சித்திரைத் திருநாள், தமிழ் புத்தாண்டு வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சியில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் என்று போற்றப்படுவதுமான மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி ஆலயத்தில் மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகியோருக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/trfd-994104.jpg)
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதைப்போல் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை மாத பிறப்பை ஒட்டி திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. சோழ நாட்டின் தலைநகர் என்று அழைக்கப்படும் உறையூரில் கோபுரங்கள் இன்றி வெட்ட வெளியில் வீற்றிருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலமாக பார்க்கப்டுகிறது.
வேண்டும் வரம் வழங்கும் வெக்காளியம்மன்" என்பதால் இக்கோயிலில் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வேண்டுதல்களை பேப்பரில் எழுதி கோவிலில் வைப்பது வழக்கம். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வெக்காளியம்மன் கோவிலில் வருடம் தோறும் சித்திரை வருடப்பிறப்பன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேர் திருவிழாவில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/trfd2-584742.jpg)
திரளான பக்தர்கள் பால்காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதேபோல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும், வயலூர் முருகன் கோவிலிலும், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்