scorecardresearch

தமிழ் புத்தாண்டு: நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்ப வண்ண அட்டைகள் இங்கே!

Happy Tamil New Year 2023: தமிழ் புத்தாண்டையொட்டி உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்ப வண்ணமையான வாழ்த்து அட்டைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil New Year Wishes Quotes 2023 in Tamil
Tamil New Year Wishes Quotes 2023 in Tamil

Happy Puthandu 2023 | Tamil New Year Wishes | தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு (புது வருடம்) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாள் சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழர்கள் சூரிய நாட்காட்டியைப் பின்பற்றுவதால், அனைத்து கணக்கீடுகளுக்கும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.

பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மகிழ்ச்சி பொங்க புத்தாடை அணிந்து கோயில் சென்று வழிபாடு செய்து கொண்டாடுவர். வீடுகளில் வண்ணக் கோலமிட்டும் விதவிதமான உணவுகள் சமைத்து நண்பர்கள், உறவினர்களுக்கு பரிமாறி கொண்டாடுவர். அன்பிற்குரியவர்களுக்கு செல்போனில் வாழ்த்து கூறி மகிழ்வோம். அந்தவகையில் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து சொல்ல வண்ணமையான வாழ்த்து அட்டைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு நன்னாளில் கவலைகள் நீக்கி அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என் அன்பு தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் குடும்பம் ஆரோக்கியமாகவும், வளமாகவும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

புத்தாண்டு ஆண்டின் சிறந்த தொடக்கம் ஆகும். அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்கள் கிடைக்க வாழ்த்துகள்!

இந்த இனிய நாளை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள், இது புத்தாண்டை வரவேற்கும் நேரம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamil new year puthandu 2023 wishes quotes status in tamil

Best of Express