Happy Puthandu 2023: சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தில் உங்கள் நண்பர்கள், அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு தமிழில் அழகான வாசாகங்களுடன் வாழ்த்து செய்தி அனுப்ப வேண்டும் என விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக அழகான புத்தாண்டு வாழ்த்து வாசகங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தருகிறது. உங்கள் அன்பானவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்புங்கள் அனுப்பிக்கொண்டே இருங்கள்.

தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் தேதியா அல்லது தை முதல் தேதியா என்று சித்தாந்தவாதிகள் மோதிக்கொள்ளும் சர்ச்சைகள் ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள். தமிழ் புத்தாண்டு என்றைக்கு இருந்தாலும் அன்றைக்கு உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளைத் தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்.

சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சூரிய நாட்காட்டியில், சூரியன் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கும்போது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு நாளில், தமிழ் பேசும் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அழகழகான அரிசி மாக்கோலமிட்டு கொண்டாட்டத்தை தொடங்குகிறார்கள். அனைவரும் தமிழ் புத்தாண்டு நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று அவரவர் கடவுளை வழிபடுகின்றனர்.

சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டாக தமிழ் பேசும் மக்களால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு நாளில் நண்பர்கள், உறவினர்கள், இளையவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

ஒரு புத்தாண்டு வாழ்த்து உங்களை அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக்கிவிடும். ஒரு இனிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அவர்களை மகிழ்ச்சியாக்கிவிடும்.

நீங்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, அழகான வாசகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இதோ உங்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அழகான புத்தாண்டு வாழ்த்து வாசகங்களைத் தருகிறது.
- இந்த புத்தாண்டு உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
- இந்த புத்தாண்டு நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியான வளமான தெய்வீக ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்!
- இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள், இது புத்தாண்டை வரவேற்கும் நேரம்.
- இனிய தமிழ் புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்: இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”