டிசம்பர் மாதம் திருப்பதி செல்வோர் ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை (செப்டம்பர் 18) முதல் தொடங்க உள்ளது. அதேபோல் 24-ந் தேதி திருப்பதியில் ரூ300 விரைவு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி கோவில், நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதியில், காணிக்கையாக சொத்துக்ளை எழுதி வைப்பது என பலரும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அதே சமயம் திருப்பதி செல்ல வேண்டும் என்றால் தரிசனம் பார்க்க 3 மாதத்திற்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில் நவம்பர் மாதம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய அனைத்து டிக்கெட்டுகளும், முன்பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனிடையே அக்டோபர் 4-ந் தேதி முதல் 12ந் தேதி வரை புரட்டாசி பிரமேற்சவ விழா நடைபெற உள்ளது.
இந்த பிரமேற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது டிசம்பர் மாத தரிசனத்திற்காக டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது. இதில் சில சேவைகளுக்கு முன்பதிவு நடைபெற உள்ள நிலையில், சுப்ரபாத சேவைக்கு ரூ350 கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் நடைபெறும் இந்த சேவையில் பங்கேற்பவர்கள், குலசேகரப்பட்டிணம் வரை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
இதனிடையே டிசம்பர் மாதம் சுப்ரபாத சேவையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், டிசம்பர் 15-ந் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிசம்பவர் 16-ந்’ தேதி மார்கழி மாதம் பிறக்க உள்ளதால், மார்கழி மாதத்தில் சுப்ரபாத சேவை கிடையாது. அதேபோல் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதாசி விழாவும், இந்த முறை டிசம்பர் மாதம் இல்லாமல் ஜனவரி மாதம் வருகிறது. அதனால் வைகுண்ட ஏகாதாசிக்கு ஜனவரி மாத தரிசனத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“