பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
சராசரி மனிதனுக்கு நவதானிய உணவு எவ்வாறு அவசியம் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி 1220 மாணவிகள் நவதானிய ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை க்ளூனி பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மட்டும் 1220 மாணவிகள் நவதானிய ஓவியங்கள் வரைந்து பள்ளியின் வளாகத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் .இந்த கண்காட்சியை பள்ளியின் முதல்வர் ரோஸ்லின் துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் ஒரு மனிதன் தன் உடல் நலத்திற்கு, ஆரோக்கியத்திற்கும், நீண்ட நாள் வாழ்வதற்கும், நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவை சிறுதானிய உணவாக மாற்றிக் கொண்டால் மனிதன் ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பதை இந்த மாணவிகள் தனது ஓவியத்தால் நிரூபித்துள்ளனர். இதை மையமாக கொண்டு இப்பள்ளி மாணவிகள் செய்துள்ளனர்.
இந்த கண்காட்சியில் தேசியப் பறவை மயில் பென்சில் ஓவியங்கள் வண்ண ஓவியங்கள் ரங்கோலி சிறுதானியங்கள் பல தானியங்கள் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்துள்ளனர். இதற்கான சிறப்பு பயிற்சியை பள்ளியின் ஓவியா ஆசிரியர் ஜெயந்தி ஒவ்வொரு மாணவிகளையும் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவர்கள் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துக் கொண்டாலும் இந்த ஓவியங்களை தனக்கு கைத்தொழில் ஒன்று இருக்கிறது என நம் நம்பிக்கையுடன் சென்றுள்ளனர்.
இந்த ஓவியங்களை பெற்றோர்கள் பொதுமக்கள் பார்த்து வியப்பு அடைந்துள்ளனர். மாணவிகளை பாராட்டியுள்ளனர் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“