Tamil New Year Wishes : அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். கொரோனா போன்ற பெருந்தொற்றின் மத்தியில் வந்து செல்லும் திருவிழா காலங்களும், பண்டிகைகளும் நம் ஒற்றுமையோடு அனைத்தையும் எதிர்த்து போராடும் வல்லமையை தரட்டும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் அனைவரையும் வாழ்த்துகின்றோம்.
Tamil Puthandu wishes Whatsapp status

உலகில் தமிழ் மொழி பேசும் அனைவருக்கும் முதலில் வாழ்த்துகள். விசு கொண்டாடும் மலையாள சகோதர சகோதரிகளுக்கும் நம்முடைய வாழ்த்துகளை கூறிக் கொள்வோம்.

என்னதான் நாம் உறவினர்களை சந்தித்து பேசி மகிழ்ச்சியாக இருந்தாலும் தூரத்தில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளை பகிர நாம் அதிகம் நம்பி இருப்பது வாட்ஸ்ஆப் செயலி போன்ற சமூக ஊடக தளங்களை தான்.

எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லையா? உங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார்டுகளை நீங்கள் அவர்களுக்கு அனுப்பி உங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம்.

கடந்த கால நிகழ்வுகளுக்கு நன்றிகளை கூறிக் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நல்ல எண்ணங்களையும் நல்ல நிகழ்வுகளையும் நாம் வரவேற்க கற்றுக் கொள்வோம்.

மகிழ்ச்சியான புத்தாண்டினை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil